Friday, September 11, 2009

மகிழ்ச்சியை பரப்ப ஒரு வழி

நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் !
ஆனால், நீங்கள் அழுதால், நீங்கள் மட்டும் தனியாகத்தான்
அழுதாக வேண்டும் !” உலகத்தில் நாம் கேள்விப்பட்ட
பொன்மொழி இது.

இதை “”முறுவலித்து முகம் மலர்ந்து நோக்குங்கள் ! உடனே
உலகமும் அப்படியே உங்களை முறுவலித்து முகம் மலர்ந்து
நோக்கும் ! ஆனால், நீங்கள் வெறுத்து முகத்தை முறுக்கிக்
கொண்டால் நீங்கள் மட்டும் தனியாய் அப்படி வெறுத்து
முகத்தை முறுக்கிக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லலாம்.

முகம் மலர்ந்து முறுவலிக்கும்போது ஒரு புன்னகையானது,
இன்பம், மகிழ்ச்சி, அன்பு, தயை ஆகிய பேறுகளை
வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஒருவரையொருவர்
புரிந்து கொள்வதாகும். நன்றி பரிமாறிக்கொள்வதாகும்.
வாழ்த்திக் கொள்வதாகும். ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும்
நட்பின் சைகை ஆகும். முறுவலித்துக் காட்டும் அந்த முக
மலர்ச்சியானது “”ஒட்டுவார் ஒட்டி” யாகும். அது ஒளிமயமான
ஆளுமையுடனும், உவகைமயமான உணர்வுடனும்
ஒருவரையொருவர் “”தொடுவதன்” மூலம் பரவுகிறது.
இந்த விருப்பத்துக்குரிய பழக்கம் உண்மையிலேயே
“”கவர்ச்சி”கொண்டதாகும்.

உங்கள் இல்லத்திலாயினும் சரி, உங்கள் அலுவலகத்திலாயினும்
சரி, பொருள் வாங்கும் கடையிலாயினும் சரி, அல்லது வழி
நடக்கும் நடையிலானும் சரி உங்கள் நாளை முறுவல் ததும்பும்
முக மலர்ச்சியுடன் தொடங்குங்கள் ! சற்றே கவனியுங்கள் !
நீங்கள் பார்க்கிற ஒவ்வொருவரும் உங்களுக்கு அறிமுகமற்ற
அந்நியர் ஒருவரும்கூட ஒரு மகிழ்ச்சியான புன்னகையை
உங்களுக்குப் பதிலாக அளிக்கிறாரா, இல்லையா ? பாருங்கள் !

இந்தப் பரந்த மனப்பான்மை கொண்ட, மகிழ்ச்சி தோய்ந்த
தோற்றத்தைப் போகுமிடமெல்லாம் உங்களுடன் நீங்கள்
கொண்டு சென்றால், இது எவ்வளவு தூரம் உங்களுக்கு
உதவுகிறது என்று தெரிந்து நீங்களே வியப்படைவீர்கள் !
உங்கள் தொழில் இதனால் சுலபமாகும். உங்களைச் சார்ந்த
முழுச் சூழலும் மாறி விடும். உங்களுடன், ஒத்துவராதவர்களும்
கூட, மகிழ்வையும், மனத்துணிவையும் பரப்பும் இந்த
உங்கள்முயற்சியில் இணங்கி ஒத்துவருவார்கள்.

உலகப் போர்க்காலத்தில் பாடப்பட்ட பின்வரும் இந்தப்
பழைய பாடலை நினைவூட்டிக் கொள்ளுங்கள் :

“” தொந்தரவுக் கவலைகளை மூட்டைக் கட்டுங்கள் ! – நீங்கள்

புன்முறுவல் சிந்தும் முக மலர்ச்சி காட்டுங்கள் !”

இந்தப் பாடல் ஓர் அறிவுரையைப் போன்றது. இந்த அறிவுரை
அந்தப் போர்க்காலத்துக்கு எத்தனை அவசியமாய் இருந்ததோ
அதே அளவுக்கு இன்றும் இது அவசியமாகும். இப்படி நடந்து
கொள்வதற்குச் செலவே இல்லை. மகிழ்ச்சியைப் பரப்ப மிக
மலிவான வழி இது.

இது உங்கள் வாழ்வில் அற்புதமான வழியில்
மனநிறைவான வழியில் பிரதிபலிக்கும் !

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List