ஒருவரது பற்களின் தன்மையை வைத்து அவரது ஆரோக்கியத்தைச் சொல்லிவிட முடியும். பற்கள் உடலின் உள்பகுதியை படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை, வெளியில் தெரியும் பற்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
உதாரணமாக, ஒருவருக்கு ஈறுகளில் பாதிப்பு இருந்தால், அவருக்கு இதய நோய் வரும் ஆபத்து அதிகம். பற்களில் பாக்டீரியா நோய்த் தொற்று இருந்தால், இதயத்தின் உட் சுவர்களில் அழற்சி ஏற்படலாம்.
பற்களிலும், ஈறுகளிலும் தேங்கியுள்ள பாக்டீரியாக்கள் ஒரு கட்டத்தில் இரத்தத்தில் கலந்துவிடும். இதன் காரணமாக தமணிகளில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேரும். அதனால் ஆந்ரோ ஸ்க்ளீரோஸிஸ்’ என்ற அசாதாரண நிலை ஏற்படும். இதன் காரணமாக மாரடைப்பு உண்டாகும்.
பற்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் புரோட்டீனின் (சிபிஆர்) அளவு கூடுதலாக இருக்கும். இதனால் இதயத்தில் அழற்சி ஏற்படும்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பற்களிலும் பாதிப்பு உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படும். ஈறுகளில் உண்டாகும் பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இல்லையேல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
சிலருக்கு வாய் நாற்றமெடுக்கும். என்னதான் ‘மவுத் ப்ரெஷ்னர்கள்’ பயன்படுத்தினாலும் நாற்றம் நிற்காது. இதற்கு வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் முகாமிட்டிருப்பது தான் காரணம். இதனைக் கட்டுப்படுத்த உடனே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் பாதிப்படையும் ஆபத்து உண்டு.
புகைப்பது அதிக ஆபத்து!
பற்களில் வரும் நோய்களுக்கு புகைபிடிப்பது முக்கியக் காரணம். ரத்தப் புற்று நோய் அல்லது எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஈறுகளில் அதிக பாதிப்பு உண்டாகும். இதற்கு அவர்களிடம் ஏற்படும் மன அழுத்தமும் முக்கியக் காரணம்.
பல்வேறு நோய்களுக்கு சிபாரிசு செய்யப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதும், ஈறுகளில் நோய் வரும் ஆபத்து உண்டு. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு சிபாரிசு செய்யப்படும் கால்சியம் கானல் பிளாங்கர்ஸ், அலர்ஜிக்குரிய ஆன்டிஹிஸ்டமின்கள், எத்மோஷரபி, ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகளின் போதும் பற்களில் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். (போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் இந்த பாதிப்பைக் குறைக்கலாம்)
பரம்பரையாக வருமா?
பல் நோய்கள் பரம்பரையாக வரும் வாய்ப்பு குறைவுதான். பெரும்பாலும் சந்தோஷமின்றி இருந்தாலும், பற்களைப் பராமரிக்காமல் வருவதும்தான் நோய் ஏற்பட அடிப்படைக் காரணங்கள். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம், இதய பாதிப்பையும் தடுக்க முடியும்.
புகை பிடிப்பவராக இருந்தால், அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும், ஃபுளோரைடு நிறைந்த பற்பசை கொண்டு, ஒரு நாளில் இரண்டு முறை பல்துலக்க வேண்டும்.
* தினமும் நாக்கை சுத்தம் செய்யவேண்டும்.
* பற்கள், நாக்கில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். (குறிப்பாக சர்க்கரை நிறைந்த பொருட்கள்)
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களை செக் செய்வது அவசியம்.
* பற்கள் அல்லது ஈறுகளைச் சுற்றியிருக்கும் திசுக்கள் வலுவிழந்து இருப்பது சோதனையில் தெரியவந்தால், தயங்காமல் டாக்டரிடம் காட்டி, தேவையேற்பட்டால் மினி ஆபரேஷன் செய்து ஈறுகளைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம்
Labels: மருத்துவம்
0 comments:
Post a Comment