ஆஸ்துமா என்றால் என்ன?
மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுதல் அல்லது மூச்சுத் திணறலைத்தான் ஆஸ்துமா என்றழைக்கின்றோம். இது ஒரு கிரேக்க வார்த்தை, ஈளை, திகைப்பு, திகறடி, மாந்தம், அள்ளுமாந்தம், உப்புச நோய், கணச்சூடு, இசிவு நோய், இரைப்பு நோய், இளைப்பு நோய், மந்தார காசம், சுவாச காசம், சுவாசத் தொய்வு, ஈரம் எனத் தமிழில் பல பெயர்களில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்நோய் குறிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்த் தாக்கத்திற்கு பரம்பரைத் தன்மை, ஒவ்வாமை இயல்பு, பலவகை அலர்ஜிகள் காரணமாகின்றன!
ஆஸ்துமா பற்றிய தவறான எண்ணங்கள் :
« ஆஸ்துமா நோய் அச்சத்துடன் வெட்கப்படவேண்டிய, ஏளனமாகப் பேசப்படும், தலை குனிவை உண்டாக்கி அவமானம் தரும் நோய்.
«ஆஸ்துமா ஒரு தொற்று நோய்.
« ஆஸ்துமா வந்தாலே போகாது.
« ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாகக் காச நோயும் இருக்கும்.
« இந்நோய்க்காரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
« ஆஸ்துமா நோயுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் கண்டிப்பாக வரும்.
« இந்நோய் கண்டவர் அனைவரும் எப்போதும் கடற்கரை ஓரங்களில், மலை வாசஸ்தலங்களில் குளிர்ப் பிரதேசங்களில், ஏசி அறைகளில் வசிக்கவும் கூடாது. அங்குப் போகவும் கூடாது.
« இந்நோய் வந்தால் மற்றவர்கள் போல் சராசரி வாழ்க்கை வாழ முடியாது.
« இதய நோய், சர்க்கரை நோய் போலவே ஆஸ்துமா நோய்க்கும் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்.
அறிவியல் உண்மைகள்
« உயர் இரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்று இதுவும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு நோய். எய்ட்ஸ் போல் நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோயும் அல்ல. அச்சமும், அவமானமும் தேவையில்லாதது.
« ‘‘சார்ஸ்’’ போல் அதிநுண் கிருமிகளால் பரவுவதே தொற்று நோய்கள். ஆஸ்துமா, கிருமிகளால் பரவும் தொற்று நோயல்ல.
« அல்லோபதி மருத்துவத்தால் நன்கு கட்டுப்படுத்தவும், அல்லோபங்சர் அணுகுமுறையில் முழுவதும் சிகிச்சை அளித்துப் போக்கக் கூடிய பல நோய்களில் இதுவும் ஒன்று.
« அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆஸ்துமா நோய்க்காரர்களும் காசநோய் உள்ளதா என்றும், காசநோய்க்காரர்களுக்கு ஆஸ்துமா நோயும் உள்ளதா என்றுதான் பரிசோதிக்க வேண்டும்.
« திருமணம் இந்நோய்க்குத் தடை அல்ல. எல்லோரும்போல் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மனைவி வழி ஆஸ்துமா, ஒவ்வாமை நோய்கள் இல்லாமலிருப்பது நல்லது.
« பெற்றோர் இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்புகள் அதிகமே தவிர, கட்டாயம் ஒன்றும் இல்லை.
« இவைகளால் குறிப்பிட்ட சில வகையினருக்கு மட்டும் ஆஸ்துமா தாக்கம் அதிகமாகிறது என்று மருத்துவர்கள் உறுதியுடன் சொன்னாலொழிய, அச்சம் கொள்ளத் தேவையில்லை.
« இந்நோய் கண்ட பலர், பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், நடிகர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும் உலா வருகிறார்கள்.
« தீவிரமான உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. பின் இரவிலும், எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிட வேண்டாம். உணவு உண்டு 2_3 மணி கழித்துப் படுப்பது நல்லது
Labels: மருத்துவம்
0 comments:
Post a Comment