Monday, September 7, 2009

பாசிப்பருப்பு கார வறுவல்

பாசிப்பருப்பு கார வறுவலை பலரும் கடைகளில் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.
இனி வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

தேவையானவை

பாசிப்பருப்பு - ஒரு கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்யும் முறை

முதலில் பாசிப் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் பாசிப் பருப்பில் இருந்து, தண்ணீரை வடித்து விடவும். அதனை உலர்ந்த துணியில் போட்டு நிழலில் உலர்த்தவும்.

பாசிப் பருப்பு நன்கு உலர்ந்ததும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதிலேயே உப்பு, மிளகாய் தூள் போட்டு காய விடவும்.

பின்னர் பாசிப் பருப்பை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், வெறும் எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொண்டு தனியாக பருப்பிலும் உப்பு, காரம் சேர்த்து கலக்கிக் கொள்ளலாம்

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List