Thursday, September 17, 2009

காபி வேண்டாம்


கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்ப்ட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளியிட்டிருந்தது.

கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்
.

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List