Friday, September 11, 2009

கருத்தரித்த காலத்தில் ரத்த அழுத்த ஆபத்து?

கர்பிணிகளுக்கு ஏற்படும் மிக அதிகமான ரத்த அழுத்தம் தாய்க்கும், குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஆபத்தை உருவாக்கும் என்று ஆன்லைன் இங்கிலாந்து மருத்துவ மாத இதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு விதமான ஆய்வு முடிவுக‌ள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இருதய நோய், பிரிஎக்லம்பேஷியா ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஎக்லம்பேஷியா என்பது கருவுற்றகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மிக அதிகமான ரத்த அழுத்தம் ஆகும். இது ஏற்பட்டால் தா‌ய்க்கும், குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஆபத்து உருவாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கர்பிணி
webdunia photoWD
கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது அவர்களின் வாழ்க்கையின் பின் காலத்தில் இருதய நோய் ஏற்பட 2 மடங்கு வா‌ய்‌ப்பு உள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டங்களில் இருதய நோய்க்கான அறிகுறி கருத்தரிப்புக்கு முன் உள்ள காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் நிலையில் அது அவர்கள் கருத்தரிக்கும் போது மிக அதிகமான ரத்த அழுத்தம் உருவாக வழிவகுத்துவிடும் என்று மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிகமான ரத்த அழுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பெண்களின் இறப்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. இந்த ஆய்வு சுமார் 30 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

கருத்தரித்த காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு, பின் காலத்தில் மிக அதிக ரத்த அழுத்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 4 மடங்கும், மரணம், மரணத்தை விளைவிக்காத இதய நோய், இரத்தம் உறைதல், ஸ்ட்ரோக் வர 2 மடங்கு‌ம் சாத்தியக் கூறுகள் இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நார்வே நாட்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 3494 பெண்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு இருதய நோய் தொடர்புடைய காரணிகளான ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த சர்க்கரை அளவு, பருமன், பாடி மாஸ் இன்பக்ஸ் ஆகியவை தொடர்பான விவரங்கள் கருத்தரிப்பு காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக மிக உயர் ரத்த அழுத்தம் இருதய நோய் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை பெண்களுக்கு 2 மடங்கு ஆபத்தை உருவாக்குகின்றன. அதேப்போன்று அதிக கொழுப்புச் சத்து, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கும், சாதாரண பெண்களை விட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List