ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். புரதச்சத்து மற்றும் சக்தி குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும். - குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.
- 5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.
- பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.
- பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
- கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
- சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.
|
|
தொற்று தன்மை உள்ள நோய்கள்
பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும். |
|
குழந்தை நலன் பராமரித்தல்
குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தை கருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும். ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. பெண் குழந்தை நலன் பராமரிப்பு என்பது கரு சிசுவாக உருவெடுப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது. குழந்தை பராமரிப்பு பணியின் நோக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும். - ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவது
- அவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
- ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
- நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா.
- தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும் குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா.
|
|
குழந்தை வளர்ச்சி
குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம். சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும். எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது. உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும். தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு | குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்
|
|
|
0 comments:
Post a Comment