தேவையானவை
கருணைக் கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
எண்ணெய் - தேவையான அளவு
புளி - சிறிது
செய்யும் முறை
கருணைக் கிழங்கை தோல் நீக்கி பட்டை பட்டையாக வெட்டி வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளித் தண்ணீர் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய், மஞ்சள், மிளகு தூள், பூண்டை தட்டிப் போட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
கருணைக் கிழங்கு மிதமாக வெந்ததும் தண்ணீரில் இருந்து வடித்து இந்த கரைசலில் போடவும்.
சிறிது நேரம் ஊறியதும், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி இந்த கருணைக் கிழங்கு மசாலாவைப் போடவும். மீன் வறுப்பது போல தனித்தனியாக துண்டுகள் கல்லில் வேகும்படி பார்த்துக் கொள்ளவும்.
அவ்வப்போது எண்ணெய் ஊற்றி திருப்பிப் போடவும்.
10 நிமிடத்தில் சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்
Labels:
kichan
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment