Wednesday, September 23, 2009

ஆரோக்கியமாக வாழ…

0

  • வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்
  • அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்
  • நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.
  • நண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
  • உணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.
  • உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.
  • இரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.
  • மஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.
  • உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
  • உணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.
  • காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.
  • வீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செய்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.
  • எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.
  • வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.
  • வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.
  • குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.
  • முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
  • முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.
  • களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.
  • உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.
  • பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.
  • அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.


அரைக்கீரை

0

தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் ஒரு வகைக் கீரை. இதை வேரோடு பிடுங்காமல் அறுத்தெடுப்பதால் அறுகீரை எனப் பெயர் வந்தது. கீரையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பாகவும், நீலநிறம் கலந்தாற் போலவும் இருக்கும். இது ஒரு உன்னதமான சஞ்சீவியாகும்.

அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.

அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.

மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கோவை, நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது. இரத்தப் போக்கால் பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.

தலைமுடி கறுப்பாக, செழிப்பாக வளர ஊக்குவிக்கும் இக்கீரை மருந்தாலும், உணவாலும் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கிறது. சிறு பித்த சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், ஜன்னி, கபம், வாதநோய், உடல்நடுக்கம் முதலான நோய்கள் தீரும். உடல் வலுப்பெறும். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தலைமுடியை கருகருவென்று நன்கு வளரச் செய்கிறது. முடிக்கு ஒரு மினுமினுப்பையும் தருகிறது.

அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். மேலும் இது நரம்பு தளர்ச்சியைப் போக்கும். நரம்புகளுக்கு பலமூட்டும். நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு இது இழந்த பலத்தை திரும்பக் கொடுக்கும். அரைக்கீரை உடம்பில் தொல்லை தரும் வாயுவைப் போக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. எந்த நோயும் அணுகாது.

அரைக்கீரை விதைத் தைலம்:

தேங்காய் எடுத்து கண் திறந்து நீரைப் போக்கி அதனுள் அரைக்கீரை விதையை நிரப்பி மூங்கில் குச்சியினால் ஆப்பிட்டு அடைத்து தரையில் புதைத்து விட வேண்டும். 48 நாள் கழித்த பின் உடைத்து ஓடு நீக்கி நன்கு அரைத்து 1-1/2 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். இதை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி நீங்கும். தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

அரைக்கீரை பற்றி அறியாதாரே கிடையாது எனலாம். அரைக்கீரைக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. எனவே இது மூலிகை வகையில் சேர்கிறது. அரைக்கீரையை மருந்தாக தயாரித்துச் சாப்பிடத் தேவையில்லை. சமையல் செய்து சாப்பிட்டாலே பல வியாதிகள் குணமாகும். தாது புஷ்டியை உண்டு பண்ணும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆண்மை இழந்தவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெறலாம். உடலில் உற்பத்தியாகும் வாயுவை அகற்றிவிடும். நாவில் ருசியறியும் தன்மை மாறினால் அரைக்கீரை சாப்பிட நா ருசியறியும் தன்மை பெற்றுவிடும். அடிக்கடி உடலில் வலி தோன்றி சங்கடப்படுகிறவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட உடல் வலி நீங்கும். அரைக்கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட இருமல் குணமாகும்

அரைக்கீரையின் மருத்துவ பயன்களைச் சொல்லி முடியாது. அநேகமாக எல்லா விதத்திலும் இது சிறந்த பச்சிலையாகப் பயன்படுகிறது. குறிப்பாக ஜுர வகைகளுக்கு நல்ல மருந்து. நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் வாயு நீக்கும் மூலிகையாகும். உடலில் எந்தப் பகுதியில் வாயு சேர்ந்து தொல்லை கொடுத்தாலும் இது உடனே அகற்றி நலம் சேர்க்கும். உடல் வலி நீங்கி உடல் கலகலப்பாக இருக்கும். அரைக்கீரையின் இயல்பு உஷ்ணம் என்றாலும் யாரும் எந்த நிலையிலும் சாப்பிடலாம். குறை ஏற்படாது.

அழகுக்கூடும்.

Sunday, September 20, 2009

பிள்ளையார்பட்டி

0
மூலவர் : கற்பகவிநாயகர்
துதிக்கை : வலம்சுழி
சிறப்பு : குடவரை
ஈசன் : திருவீசர்
அம்பாள் : சிவகாமி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : ஊருணி
ஊர் : பிள்ளையார்பட்டி
புராணபெயர்: மருதம்பூர்
மாவட்டம் : சிவகங்கை

பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

சதுர்த்தி விரதம்: முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்
கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்

கோயிலின் சிறப்பம்சம்


*பாஸ்போர்ட் விநாயகர் : வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் ஏதாவது பிரச்னை இருந்தால் பிள்ளையார் பட்டி கோயில் வாசலில் உள்ள பாஸ்போர்ட் விநாயகரிடம் பிரச்னையை இவரிடம் ஒப்படைத்து விட்டால் ரூட் கிளியராவது நிச்சயம்

*அமர்ந்த நிலையில் நவகிரகங்கள் : விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தலபெருமைகள்

*இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.இது மிகவும் விசேசமானது.
*6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
*இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
*மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
*குடவரைக் கோயில்.
*தமிழக்த்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்

தல வரலாறு

விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார்.இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு குடவரைக் கோயில் ஆகும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது

முக்கிய திருவிழாக்கள்

*சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

*திருக்கார்த்திகை

*மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.

இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில்

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சிவகங்கை 44 கி.மீ.
காரைக்குடி 16 கி.மீ.
மதுரை 74 கி.மீ.
திருப்பத்தூர் 9 கி.மீ.

தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் கோயில் விடுதிகளிலோ அல்லது திருப்பத்தூர், காரைக்குடி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கோயில் விடுதிகள் : பி.கே.என்.கே.விடுதி.

திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் லாட்ஜ்கள் கட்டணம் ரூ.200 முதல் ரூ.600 வரை.

போக்குவரத்து வசதி : *சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார் பட்டிக்கு பேருந்து வசதி உள்ளது..

*அருகிலுள்ள ரயில் நிலைம் காரைக்குடி.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை,திருச்சி.

Saturday, September 19, 2009

பெண்களுக்கான எதிரான கொடுமைகளை தடுக்க - மத்திய அரசின் 21 அம்ச திட்டம்

0

¹¶ªì™L : ªð‡èÀ‚° âFó£ù °Ÿøƒè¬÷ î´‚è ñˆFò Üó² 21 Ü‹ê F†ìˆ¬î Üñ™ð´ˆ¶Aø¶. Þ¬î àìù®ò£è H¡ðŸÁ‹ð® â™ô£ ñ£Gô Üó²èÀ‚°‹ Üõêó è®î‹ â¿F»œ÷¶. ®™ ðóõô£è ªð‡èÀ‚° âFó£ù õ¡º¬ø, ð£Lò™ ðô£ˆè£ó‹, «ð£¡ø¬õ ÜFèKˆ¶ õ¼õ¬î ñˆFò Üó² èõùˆF™ ªè£‡´œ÷¶. °PŠð£è ÜKò£ù£M™ àœ÷ å¼ Aó£ñˆF™ å«ó õ‹êˆ¬î «ê˜‰î Þ¬÷ë‹, Þ÷‹ ªð‡µ‹ F¼ñí‹ ªêŒ¶ ªè£‡ìù˜.


Þ Aó£ñ 辡C™ âF˜Š¹ ªîKMˆî¶. è†ìŠ ð…ê£òˆ¶ «ð£¡Á ªêò™ð´‹ Þ‰î Aó£ñ 辡C™ àˆîó¾Šð® Þ¬÷ë¡ ð´ªè£¬ô ªêŒòŠð†ì£˜. õì ñ£GôƒèO™ ðóðóŠ¬ð ãŸð´ˆFò ê‹ðõ‹ ñˆFò àœ¶¬ø ܬñ„êèˆF¡ èõùˆ¶‚° ªè£‡´ ªê™ôŠð†ì¶. ªð‡èÀ‚° âFó£ù Þ¶«ð£¡ø ê‹ðõƒèœ ðô ñ£GôƒèO™ ïìŠð, â™ô£ ñ£Gô Üó²èÀ‚°‹ àœ¶¬ø ܬñ„êè‹ Üõêó è®î‹ ÜŠH»œ÷¶. ÜF™, ªð‡èÀ‚° âFó£ù °ŸøƒèO™ Þ¼‰¶ Üõ˜è¬÷ ð£¶è£Šð, àìù®ò£è 21 Ü‹ê ïìõ®‚¬è¬ò â´‚°‹ð® õL»ÁˆF»œ÷¶. 21 Ü‹ê ïìõ®‚¬èJ¡ Mõó‹ õ¼ñ£Á:-------------------


* ªð‡èÀ‚° âFó£ù °ŸøƒèO™ î£ñî‹ Þ¡P âŠ.ä.ݘ. ðF¾ ªêŒò «õ‡´‹.
* âŠ.ä.ÝK™ Þì‹ ªðŸÁœ÷õ˜è¬÷ ¬è¶ ªêŒò «õ‡´‹.
* 3 ñ£îƒèO™ °ŸøŠ ðˆFK¬è î£‚è™ ªêŒò «õ‡´‹.
* ð£Lò™ ðô£ˆè£óˆ¶‚° àœ÷£ù ªð‡èOì‹Þó‚è‹ è£†ì «õ‡´‹.
* è†ì£òˆ F¼ñí‹ î´‚èŠðì «õ‡´‹.
* ªð‡èœ, °ö‰¬îèO¡ àK¬ñèœ ð£¶è£‚èŠðì «õ‡´‹.
* ðœO, è™ÖKèO™ ñ£íMèÀ‚° àKò ð£¶è£Š¹ ÜO‚è «õ‡´‹.
* ªð‡èœ ªî£ì˜ð£ù õö‚°è¬÷ M¬ó¾ cFñ¡ø‹ ñŸÁ‹ °´‹ðïô cFñ¡øƒèO™ Mê£K‚è ïìõ®‚¬è â´‚èŠðì «õ‡´‹.
* ªð‡ C² ð´ªè£¬ô¬ò î´‚è ²è£î£óˆ ¶¬ø»ì¡ ެ퉶 «ð£h꣘ ðEò£Ÿø «õ‡®ò¶ ÜõCò‹.
* ð£Lò™ ðô£ˆè£óˆî£™ ð£F‚èŠð†ì ªð‡èO¡ ñÁõ£›¾‚° «î¬õò£ù â™ô£ àîMèÀ‹ ªêŒò «õ‡´‹.


Þ¬õ à†ðì 21 ïìõ®‚¬èè¬÷ ñ£Gô Üó²èœ àìù®ò£è â´‚è «õ‡´‹ â¡Á ñˆFò Üó² è®îˆF™ ÜP¾ÁˆF»œ÷¶.

Friday, September 18, 2009

இல்லறம் இனிக்க வேண்டுமா?

0

திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக

* உங்கள் மனைவி விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.

* உங்கமனைவி உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.

* உங்க மனைவிக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.

*மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.

*கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க. சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.

*நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்க… நீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க மனைவி பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.

*மனைவியுடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.

*முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.

*உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி கிப்ட்ஸ் கொடுங்க… விசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!

*வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க மனைவிக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

*நமக்கு தான் வயசு நாற்பதை தாண்டிடுச்சே, இனிமே என்ன இருக்கு என்று நினைக்காம, உங்களோட அழகுல கவனம் செலுத்த மறக்காதீங்க.

*தினமும் இரவில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்க. சினிமா, அரசியல் என, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்க.

*ஐ லவ் யூ! இந்த வார்த்தையை உங்கள் மனைவியிடம் அடிக்கடி சொல்லுங்க. இந்த வார்த்தையோட பவரை புரிஞ்சுப்பீங்க.

*நீங்க தவறு செய்யும் போது, உங்க மனைவியிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க.

*வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, உங்கள் மனைவியுடன் எங்காவது டூர் போயிட்டு வாங்க. குழந்தைகள் இருந்தா தாத்தா பாட்டி அல்லது நண்பர்கள் என யாரிடமாவது விட்டுச் செல்லுங்கள். அந்த நாட்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்படியெல்லாம் நீங்க இருந்தா உங்க குடும்பத்துலயாவது… சண்டையாவது… பின் என்ன? வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே!



Thursday, September 17, 2009

ஆஸ்த்மா விற்கு மருந்தாகும் மிளகு

0

Ýv¶ñ£ «ï£Jù£™ ð£F‚èŠð†ìõ˜èœ âˆî¬ù«ò£ ¬õˆFò‹ ªêŒ¶‹ °íñ£èM™¬ô â¡Á ¹ô‹¹ðõ˜èÀ‚° Þ¶ ï™ô ªêŒFò£°‹.

Üî£õ¶, Ýv¶ñ£ «ï£»Ÿøõ˜èÀ‚° I÷° å¼ Ü¼ñ¼‰î£è ܬñAø¶.

I÷°, A󣋹 ñŸÁ‹ ⼂è‹Ì ÝAò Í¡¬ø»‹ êñ Ü÷¾ â´ˆ¶ ¬ñ «ð£ô ܬóˆ¶, I÷° Ü÷MŸ° CÁ CÁ ñ£ˆF¬óè÷£è ༆® GöL™ àô˜ˆF‚ ªè£œ÷¾‹.

ÞF™ å¼ ñ£ˆF¬ó iî‹ Þ¼ «õ¬÷ ªõ‰cK™ ꣊H†´ õó Ýv¶ñ£, Þ¼ñ™, êO, èð‹ ÝAò¬õ °íñ£°‹.

ޫð£ô, Ýv¶ñ£ «ï£Jù£™ Í„² Mì CóñŠ ð´‹«ð£¶ å¼ ð¿ˆî õ£¬öŠðöˆ¬î ÜùL™ «õè ¬õˆ¶, I÷°ˆÉO™ ªî£†´ à†ªè£œ÷ àKò Gõ£óí‹ ªðøô£‹.

காபி வேண்டாம்

0

கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்ப்ட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளியிட்டிருந்தது.

கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்
.

கருப்பான பெண்ணா நீங்கள்..

0
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....?


பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.


பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.
வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

Wednesday, September 16, 2009

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்...

0

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.

- அரிஸ்டாட்டில்.

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

- மாத்யூஸ்.

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

-நியேட்சே.

வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

- பிராய்டு.

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.

- புத்தர்.


கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.

- முகம்மது நபி.

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

- ஸ்டீலி.

மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

- வள்ளலார்.


இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்.

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்.

நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.

- தாமஸ் புல்லர்.


தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

- டிரெட்ஸி.

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.

- மகாகவி பாரதியார்.

அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.

- கில்ப்பின்.

நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.

-சுவாமி மித்ரானந்தா.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

- ஆபிரஹாம் லிங்கன்.

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.

-பிராங்க்ளின்


ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.

- பெர்னாட்ஷா.

அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

- சர்ச்சில்.

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.

- ஜி.டி.நாயுடு.

நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.

- சுவாமி சுகபோதானந்தா.

பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.

-வைரமுத்து.

Tuesday, September 15, 2009

பிரசவம்

0

"ஏங்க கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குங்க கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸுலேர்ந்து வந்திருங்க"

"ஐய்யைய்யோ...இப்போ கிளம்பினா கூட வரதுக்கு முக்கால் மணிநேரம் ஆகுமேமா? நான் வேணா ஜெய்கிட்ட ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?"

"வேண்டாம் நீங்க வாங்க..அதுவரைக்கும் பொறுத்துப்பேன்..."

"சரிம்மா உடனே கிளம்பறேன்" அரக்க பரக்க வீட்டுக்கு சென்றடைந்த போது உதட்டைக் கடித்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து நின்று கொண்டிருந்தாள்

"ரொம்ப வலிக்குதா..ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப் போலாமா? ஆம்புலன்ஸ கூப்பிடட்டுமா?"

"வேண்டாம் வலி அப்பிடியே தான் இருக்கு கூடல..ஆனா வலிச்சிக்கிட்டே இருக்கு"

"இரு நான் வேணா ஃபோன் பண்ணிக் கேக்கறேன்"

"வலி கூடுகிறதா, உதிரப் போக்கு இருக்கா? பனிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறதா? நீர் வருகிறதா? எப்போ வலி ஆரம்பித்தது? ஆயிரெத்தெட்டு கேள்வி கேக்கிறாங்க...அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்...அப்போ பார்த்துட்டு வாங்கன்னு சொல்றாங்க...எனக்கென்னவோ பயமா இருக்குடா கிளப்பி போயிறலாம்.."

வலிக்கு கடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டின் ஓரத்தில் கீற்றாய் ஒரு முறுவல்."பொண்டாட்டி மேல அவ்வளவு கரிசனமா??.."

"நக்கல் விடற நேரமா இது? நானே உதறிக்கிட்டு இருக்கேன்"

"இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பலாம் அங்க காத்திட்டு இருக்க வைச்சிருவாங்க எனக்கு அங்க போனா எனக்கு ரொம்ப அன் ஈசீயா இருக்கும்"

அவள் விழியோரங்களில் கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. உதட்டை மறுபடியும் கடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டாள்.

"எதாவது சூடா குடிக்க போட்டு தரவா? கற்பகரட்சாம்பிகை விளக்கெண்ணை இருக்கு அம்மா வலி வந்தவுடனே வயித்துல தடவ சொன்னாங்க..."

அவள் என் கைகளை இறுக்கியதிலிருந்து வலி கூடியிருப்பது தெரிந்தது. "இதப் பாரு லூசுத்தனமா பிகேவ் பண்ணாத நான் டாக்ஸிக்கு சொல்றேன் போயிடலாம்..இதுக்குத் தான் இங்க வேணாம் ஊர்ல வைச்சிக்கலாம்னு சொன்னேன்...தைரியத்துக்கு கூட ஒருததரும் இல்லாம..என்ன... " வாயைப் பொத்தினாள்.

"இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா எனக்கும் தைரியம் போயிடும்...கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா?"

"இதுக்குத் தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்"

"என்ன வேண்டாம்ன்னு....?? ஹ...யாரு நீ...?" வலிக்கு நடுவிலும் குறும்பாக சிரித்தாள்.

"போட்டேன்னா தெரியுமா...நான் குழந்தை பத்தி சொன்னேன்..இப்போ வேண்டாம்னு நான் சொல்லலை? ஆமா நீ என்ன வலின்னு சொல்லிட்டு என்ன நக்கல் விட்டுக்கிட்டு இருக்க...உண்மையிலேயாவா...இல்ல சும்மா சீன் போட்டு என்னை கலங்கடிக்கிறியா?.." அவள் நடிக்கவில்லை என்று தெரிந்தும் பேச்சுப் போக்கு காட்டினேன்.

"அம்மா...." என்று அவள் முனகிய போது டாக்ஸி வந்திருந்தது.

"மேடு பள்ளம் பார்த்துப் போங்க ப்ளீஸ், வேகமா வேண்டாம் ஆனா சீக்கிரமா போங்க..அந்த வழி சுத்து இப்படி போங்க..."

ஆஸ்பத்திரி வந்த போது அவளால் இறங்க முடியவில்லை கையை இறுக்க பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

"முடியலைடா.."

"கொஞ்சம் பொறுத்துக்கோடா நான் போய் ஸ்ட்ரெட்ச்சர் எடுத்துட்டு வரேன்..."

"எக்ஸ்க்யூஸ்மி என் மனைவிக்கு பிரசவம்...ரொம்ப முடியவில்லை டாக்ஸியில் இருக்கிறாள்...ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்கள்...ஸ்டெரெட்சர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள் ப்ளீஸ் சீக்கிரம்..."

"உங்கள் மனைவி எங்கே? உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்"

"அவள் வலியில் இருக்கிறாள்...வெளியே டாக்ஸியில்"

"பரவாயில்ல மிஸ்டர்...அட்ஜஸ்ட் செய்து வரச்சொல்லுங்கள்...ஸ்ட்ரெட்சர் வார்டிலிருந்து வரனும்..டாக்டர் வரமாட்டார் நர்ஸ் தான் வந்து பார்ப்பார்...இப்பொழுது ஒரு பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.....பனிக்குடம் உடைந்துவிட்டதா?.."

"என்ன விளையாடறீங்களா...நான் என் மனைவிக்கு முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்..நீங்க கூலா கதை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்..."

"நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள்...முதலில் அமைதியாகுங்கள்.."

"என்னங்க...அங்கே என் மனைவி துடிச்சிட்டு இருக்கா..நீங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...அவள முதல்ல அட்மிட் பண்ணுங்க...அப்புறம் நாம பேசுவோம்...மேனேஜர கூப்பிடுங்க..."

"பதட்டப்படால் ஒன்றும் ஆகாது மிஸ்டர்....நர்ஸைக் வந்து பார்ப்பார்..இல்லையென்றால் ஸ்ட்ரெச்சருக்கு காத்திருக்க வேண்டும்..."

டாக்ஸிக்கு ஓடிப் போய் பார்த்தால் டிரைவர் ஓரமாய் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தான். அவள் கசங்கிப் போய் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...இப்போ நர்ஸ் வந்துருவாஙக...என் கையப் பிடிச்சிக்கோ...கடவுள நினைச்சிக்கோ....தோ வந்துருவாங்க..."

ஒடிசலாய் ஒரு நர்ஸ் வந்தாள்..

"யாருக்கு பிரசவம்..."

"அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிகிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்..என்னா விளையாடுறீங்களா...இங்க ஒரு பொம்பளை தானே இருக்கா?...இதோ என் மனைவிக்குதான்...கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் ப்ளீஸ்"

"நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே..புதுப் பொண்டாட்டியா?"

நாசமாப் போடி...நீயும் உன் கடி ஜோக்கும்.."நீங்க இந்த மாதிரி கடி ஜோக்கடிக்காமல் என் மனைவியைப் பார்த்தால் கொஞ்சம் சொஸ்தமாயிருக்கும்"

"ஓகே ஓகே டென்ஷனாகத மேன்...நீ அவளை ரொம்ப பயமுறுத்திகிறாய்...இதே லட்சணத்துல நீ இவள பிரசவ அறையிலும் வந்து டென்ஷன் படுதினாயானால்...சுகப் பிரசவம் ஆன மாதிரி தான்...ஜாக்கிரதை"

நான் அதற்கப்புறம் கொஞ்சம் அடக்கிக் கொண்டேன்.

வீல் சேரில் கூட்டிப் போய் ஒர் அறையில் படுக்க வைத்து ரெண்டு மூனு செக் செய்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே வெளியே போய்விட்டார்கள்.

"என்னங்க எதாவது காம்ப்ளிகேஷனா?..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை...நீங்க அவளுடன் நில்லுங்கள் இன்னொரு நர்ஸ் வந்து பார்ப்பார்"

"என்னம்மோ திடீர்ன்னு கொஞ்சம் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு"

"வாய மூடிக்கிட்டு இருடி ஏற்கனவே லட்சனமா பார்க்கிறா ..அவ காதுல விழுந்திடப் போகுது..அப்புறம் வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா வான்னு சொல்லிடுவா..."

இன்னொரு குண்டு நர்ஸ் வந்து ஒரு ஊசி போட்டார். பக்கத்திலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்துவிட்டு " நீ வலிதெரியாமல் இருக்க ஊசி கேட்கவில்லையா?" என்று கேட்டார்.

நாங்கள் முழித்ததுலேர்ந்தே இல்லை என்று புரிந்து கொண்டு.."ரொம்ப வலிச்சா இந்த டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிக்கொள்..." என்று சொன்னார்.

"பெயின் கில்லரா?.."

"இல்ல பெத்தடின்...வலி தெரியாமல் இருக்கும்"

"எனக்கு வேண்டாம்பா.."

நேரமாக நேரமாக வலியெடுக்க ஆரம்பித்தது. கட்டில் கம்பியைப் பிடித்துக்கொண்டு முக்கினாள், முனகினாள்.

"ரொம்ப முடியலைடா...." என்று என் கையப் பிடித்துக்கொண்ட போது எனக்கு மனதைப் பிசைந்தது. சும்மாவே லேசாக அடிபட்டாலே பதறும் அவள் எப்படி பிரசவ வலி பொறுக்கப் போகிறாள் என்று பயமாக இருந்தது.

"இந்தா இத வாயில வெச்சு உறிஞ்சு...வலி தெரியாமல் இருக்கும்..."

வலி அவளை அனிச்சையாக பெதடின் குழாயை வாயில் பொறுத்தி உறிஞ்ச வைத்தது.

என் கைகளை இறுக்கிக் கொண்டாள்...படுக்கை லேசாக நனைந்த மாதிரி இருந்தது. ஓடிப் போய் நர்ஸை கூப்பிட்டேன்.

"பனிக்குடம் உடைந்துவிட்டதா?" ஓடி வந்து பார்த்தார்கள்.

"இல்லை..இன்னுமில்லை...இப்பொழுது தான் நல்ல வலி எடுத்து பனிக்குடம் உடைய ஆரம்பித்திருக்கிறது. வலியை அடக்கிக் கொள்ளாதே...முக்குவேண்டும் போல் இருந்தால் பயப்படாமல் முக்கு.."

ரத்த அழுத்தம் சோதனை செய்தார்கள். அவள் கண்கள் சொருகியிருந்தன. "இதோ பார் இனிமேல் நீ சோர்ந்து போகக் கூடாது...அந்தக் குழாயை இனிமேல் உறிஞ்சாதே...நன்றாக முக்கு...புஷ்...புஷ்..."

"இல்லை முடியலை...காலில் நரம்பு இழுத்துக் கொள்கிறது..என்னால முடியலைடா..."

காலை தடவிக் கொடுத்தேன்..."கவலப்படாதமா நீ முக்கு ...ஒன்னும் ஆகாது" நாலு பிரசவம் பார்த்தவன் மாதிரி உதடு சொன்னாலும் பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் பையன் மாதிரி அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டு கொண்டிருந்தது. தொளக் என்ற சப்தத்துடன் ரத்தமும் நீருமாய் திரவங்கள் பீறிட பனிக்குடம் உடைந்து.

"கமான்...பனிக்குடம் உடைந்து நீரெல்லம் வெளியேறிவிட்டது இனிமேல் காத்திருக்கக் கூடாது...நன்றாக முக்கு...சீக்கிரம் பிரசவாகிவிடும்..."

"வலியை பொறுத்துக்கிட்டு நல்லா முக்குடா...சீக்கிரம் குழந்தை பிறந்துடும்...ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துகோடா..."

துணியை தண்ணீரில் நனைத்து அவள் முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருந்தேன். படுக்கவுமில்லை உட்காரவுமில்லை என்ற பொசிஷனில் அடுத்த கால் மணி நேரம் அவள் படுகிற பட்டை பார்த்த போது எனக்கே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

"இன்னும் கொஞ்சம் டா"

"அம்ம்...ம்ம்ம்..ம்மா" என்று அவள் முயற்சியில் குழந்தை தலை தெரிந்தது.

"இன்னும் நல்லா முக்கும்மா..இந்த நிலையில் குழந்தை இருக்கக்கூடாது...தலை வெளியே வர வேண்டும்...இல்லையென்றால் குழந்தைக்கு மூச்சு முட்டும்...ம்ம்..நல்ல புஷ்..புஷ் புஷ்..." நர்ஸின் பதட்டம் எல்லோருக்க்கும் தொற்றிக் கொண்டது.

தனக்கு வலித்தாலும் குழந்தைக்கு மூச்சு முட்டக்கூடாது என்று அவள் கவலை கண்ணில் தெரிந்தது. அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது. வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருநதது.. குழந்தை வெளியே வந்த பிறகும் அவள் வயிற்றை அழுத்தி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் வயிற்றில் இருந்து எடுத்த கழிவுகளைப் பார்க்க மயக்கமே வந்தது. வெளியே வந்த குழந்தை அழுவதற்காக லேசாக அடித்த போது நெஞ்சம் பதறியது. குழதையை காய்கறி கழுவது போல் கழுவி செக்கப்புகள் செய்து பஞ்சுக் குவியலாய் கொடுத்தார்கள். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொட்ட போது அடைந்த உணர்சிக்கு வார்தகளில்லை. குழந்தையை மெதுவாக தூக்கி அவளிடம் காட்ட திரும்பியது போது அவள் கிறக்கத்திலிருந்தாள்.

"பாருடா குழந்தைய பாரு.."

"ம்ம்..." என்று முனகியபடியே உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையுடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள். விழியின் ஓரத்தில் இன்னும் கண்ணீர் கசிந்து கொண்டிருநதது. அவள் கண்கள் வலி மயக்கத்தில் மீண்டும் சொருகிக் கொண்டன.

தாய்மையைப் பற்றி எவ்வளவோ கேட்டிருந்தாலும் அதற்க்கு ஈடு இணை இல்லை என்று அன்று தான் உரைத்தது. தாய்மைக்கு ஈடாக தந்தைமை என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல எதுவுமே ஈடாகாது என்று தோன்றியது. தொப்புள்கொடி உறவு என்றால் என்ன என்பதை உணர பிரசவத்தில் கூட இருந்தால் போதும்

Monday, September 14, 2009

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

0
பல தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றே தெரியவில்லை. அவர்களுக்காகவே தாய்ப்பால் கொடுப்பது மற்றும் குழந்தைகளின் நலன் குறித்த மையத்தை ஆரம்பித்திருக்கிறோம்’’ என்கிறார்கள் டாக்டர் பத்மினியும், டாக்டர் சுப்பிரமணியமும்.

‘‘நம் முன்னோர்கள் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொண்டதாக நாம் கேள்விப்பட்டதே கிடையாது. வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு அவர்கள் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுத்ததில்லை.

ஆனால், இப்போது குறைமாத பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது சகஜமாகி வருகிறது. இதுதவிர, பிறந்த குழந்தையை எப்படித் தூக்க வேண்டும் என்று கூட இப்போது பல தாய்மார்களுக்கு தெரிவதில்லை. பிரசவத்துக்குப் பின் தாயிடம் சுரக்கும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்தப் பாலை சீம்பால் என்பார்கள். இதை குழந்தைக்கு கொடுக்க பலர் தயங்குகின்றனர். அது தவறு. காரணம், குழந்தையின் செரிமான சக்தியை வளர வைக்க இந்தப் பாலே உதவுகிறது’’ என்று சொன்ன டாக்டர் சுப்பிரமணியத்தை, தொடர்ந்தார் டாக்டர் பத்மினி.

‘‘பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசம், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமான ஒரு பந்தத்தை உருவாக்குகிறது. தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை சரியான நிலையில் பிடிப்பதும் அவசியம். மடியில் தலையணையை வைத்துக் கொண்டு, குழந்தையை கையில் ஏந்த வேண்டும்.

குழந்தையின் வயிறும், தாயின் வயிறும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் படி குழந்தையை படுக்க வைக்க வேண்டும். அதாவது குழந்தை ஒரு கையில் படுத்துக் கொண்டு தாய்ப்பாலை பருகும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு கழுத்து வலியும், தாய்க்கு மார்பக காம்பிலும் பிரச்னைகள் ஏற்படாது. சரியான நிலையில் குழந்தையை கிடத்தாமல், குழந்தை பால் குடிக்கவில்லை என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

குழந்தை மார்பக காம்பை மட்டும் சப்பினால் பால் சுரக்காது. மார்பக காம்பை சுற்றி உள்ள பகுதியை பிடித்து குடிக்கும் போதுதான் பால் வரும். சில குழந்தைகள் வாயை நன்கு திறந்து குடிக்க கஷ்டப்படுவார்கள். அந்த சமயத்தில் சுண்டு விரலை அவர்கள் வாயினுள் செலுத்தி வாயை நன்கு திறக்க வைத்த பின் குடிக்க வைக்கலாம்.

பல தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்பது தலையாய பிரச்னையாக உள்ளது. பொதுவாக குழந்தை வாய் வைத்து சப்பி குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பால் சுரக்கும். இப்போது பல தாய்மார்கள் வேலைக்கு செல்வதால், குழந்தை பிறந்த மூன்று மாதத்திலிருந்தே மற்ற பால்களை கொடுத்து பழகி விடுகின்றனர்.

அப்படி செய்யாமல், வேலைக்கு செல்வதற்கு முன், ஒரு கிண்ணத்தில் தாய்ப்பாலை எடுத்து நன்றாக மூடி, ஃபிரிட்ஜில் வைத்து, குழந்தைக்கு பசி எடுக்கும்போது கொடுக்கலாம். தாய்ப் பாலை சேகரிக்க பிரஸ்ட் பம்ப் கருவி எல்லா சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் கிடைக்கிறது. இதை மார்பகத்தில் வைத்து பம்ப் செய்தால், பால் தானாக அதில் உள்ள பாத்திரத்தில் விழும்.

ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இப்படி வைக்கும் தாய்ப்பாலை சூடு செய்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து காய்ச்சக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுப்பிலிருந்து இந்த தண்ணீர்ப் பாத்திரத்தை இறக்கி, தாய்ப்பால் இருக்கும் கிண்ணத்தை, இதில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்னரே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதன் இடையில் மற்ற பால்களை கொடுக்க வேண்டாம்.

ஒரு வயதுக்கு பிறகு மற்ற பால்களை கொடுக்கும் போது அதில் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பழகுவது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் புத்திகூர்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்’’ என்கிறார் டாக்டர் பத்மினி

Friday, September 11, 2009

மூன்று முட்டை மந்திரம்

0
சூடான் நாட்டின் ராஜாவிற்கு அழகான மகன் பிறந்தான்.அவன் பெயர் அனந்தா.மகன் பிறந்த கொஞ்ச நாட்களில் ராஜா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.இளவரசன் அனந்தாவை வளர்க்கும் முழு பொறுப்பும் ராணிக்கு வந்தது. அனந்தா திறமையான வீரனாக வளர்ந்தான்.ராணிக்கு ஒரே ஒரு கவலை தான். அனந்தாவிற்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவேண்டும். ஏனெனில் ராஜாவிற்கு தீய நண்பர்களின் சகவாசம் கிடைத்து, குடி போதைக்கு அடிமையாகி நோய்வாய்ப்பட்டு இறந்தார். அதனால் மேலும் கவலையுற்றார் ராணி. அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரத்தை” சொன்னார் ராணி. யார் உனக்கு நண்பர்களாக இருக்க விருப்பப்படுகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாக கொடு. அவர்கள் எப்படி உண்கிறார்களோ அதன்படியே அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்றார் முதலில் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர் பயிற்சிகளை மேற்கொண்டனர்.அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளை கொடுத்தான். அவன் ஒரு முட்டையை சாப்பிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிற்கு கொடுத்தான். அவன் அம்மாவிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னதற்கு “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளை கொடுத்துள்ளான்” இவன் நெருங்கிய நட்பு வேண்டாம் என்றார்கள்.

சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளை படிக்கும் போது வியாபாரி மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது. அவனையும் அழைத்து மூன்று முட்டைகளை கொடுத்தான் அனந்தா. அவன் மூன்று முட்டைகளையும் முழுங்கினான். அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பும் வேண்டாம் என்றார் ராணி.மற்றொரு மந்திரி மகன் முட்டை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் உன்னை மதிக்கவேயில்லை பார் என்று அவன் நட்பையும் வேண்டாம் என்றாள் ராணி.

ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான் அனந்தா. வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகுவெட்டியின் மகன் விநோதன் இவன் வயதை ஒத்தவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாட சென்றான்.

விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் அனந்தா. அவனுக்கும் மூன்று முட்டைகளை தட்டில் வைத்தான். விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டை சாப்பிடலாம் என்றான். அனந்தாவிற்கு ஆனந்தம். உடனே விநோதனின் நட்பை தாயிடம் தெரிவித்தான். தாய் மகிழ்ந்தாள். அவன் விறகுவெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னை சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கவில்லை. இது தான் நட்பில் முக்கியம்.

இளவரசன் அனந்தா போர் முறைகள், கல்வி, அரசியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றான். பெரியவனானதும் நாட்டின் அரசனாக பொறுப்பேற்றான். விநோதன் நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். கடைசி வரை நல்ல நண்பர்களாக விளங்கினார்கள்.

.

பற்கள்

0

ஒருவரது பற்களின் தன்மையை வைத்து அவரது ஆரோக்கியத்தைச் சொல்லிவிட முடியும். பற்கள் உடலின் உள்பகுதியை படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை, வெளியில் தெரியும் பற்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

உதாரணமாக, ஒருவருக்கு ஈறுகளில் பாதிப்பு இருந்தால், அவருக்கு இதய நோய் வரும் ஆபத்து அதிகம். பற்களில் பாக்டீரியா நோய்த் தொற்று இருந்தால், இதயத்தின் உட் சுவர்களில் அழற்சி ஏற்படலாம்.

பற்களிலும், ஈறுகளிலும் தேங்கியுள்ள பாக்டீரியாக்கள் ஒரு கட்டத்தில் இரத்தத்தில் கலந்துவிடும். இதன் காரணமாக தமணிகளில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேரும். அதனால் ஆந்ரோ ஸ்க்ளீரோஸிஸ்’ என்ற அசாதாரண நிலை ஏற்படும். இதன் காரணமாக மாரடைப்பு உண்டாகும்.

பற்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் புரோட்டீனின் (சிபிஆர்) அளவு கூடுதலாக இருக்கும். இதனால் இதயத்தில் அழற்சி ஏற்படும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பற்களிலும் பாதிப்பு உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படும். ஈறுகளில் உண்டாகும் பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இல்லையேல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.

சிலருக்கு வாய் நாற்றமெடுக்கும். என்னதான் ‘மவுத் ப்ரெஷ்னர்கள்’ பயன்படுத்தினாலும் நாற்றம் நிற்காது. இதற்கு வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் முகாமிட்டிருப்பது தான் காரணம். இதனைக் கட்டுப்படுத்த உடனே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் பாதிப்படையும் ஆபத்து உண்டு.

புகைப்பது அதிக ஆபத்து!

பற்களில் வரும் நோய்களுக்கு புகைபிடிப்பது முக்கியக் காரணம். ரத்தப் புற்று நோய் அல்லது எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஈறுகளில் அதிக பாதிப்பு உண்டாகும். இதற்கு அவர்களிடம் ஏற்படும் மன அழுத்தமும் முக்கியக் காரணம்.

பல்வேறு நோய்களுக்கு சிபாரிசு செய்யப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதும், ஈறுகளில் நோய் வரும் ஆபத்து உண்டு. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு சிபாரிசு செய்யப்படும் கால்சியம் கானல் பிளாங்கர்ஸ், அலர்ஜிக்குரிய ஆன்டிஹிஸ்டமின்கள், எத்மோஷரபி, ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகளின் போதும் பற்களில் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். (போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் இந்த பாதிப்பைக் குறைக்கலாம்)

பரம்பரையாக வருமா?

பல் நோய்கள் பரம்பரையாக வரும் வாய்ப்பு குறைவுதான். பெரும்பாலும் சந்தோஷமின்றி இருந்தாலும், பற்களைப் பராமரிக்காமல் வருவதும்தான் நோய் ஏற்பட அடிப்படைக் காரணங்கள். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம், இதய பாதிப்பையும் தடுக்க முடியும்.

புகை பிடிப்பவராக இருந்தால், அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும், ஃபுளோரைடு நிறைந்த பற்பசை கொண்டு, ஒரு நாளில் இரண்டு முறை பல்துலக்க வேண்டும்.

* தினமும் நாக்கை சுத்தம் செய்யவேண்டும்.

* பற்கள், நாக்கில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். (குறிப்பாக சர்க்கரை நிறைந்த பொருட்கள்)

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களை செக் செய்வது அவசியம்.

* பற்கள் அல்லது ஈறுகளைச் சுற்றியிருக்கும் திசுக்கள் வலுவிழந்து இருப்பது சோதனையில் தெரியவந்தால், தயங்காமல் டாக்டரிடம் காட்டி, தேவையேற்பட்டால் மினி ஆபரேஷன் செய்து ஈறுகளைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம்

ஆஸ்துமா

0

ஆஸ்துமா என்றால் என்ன?

மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுதல் அல்லது மூச்சுத் திணறலைத்தான் ஆஸ்துமா என்றழைக்கின்றோம். இது ஒரு கிரேக்க வார்த்தை, ஈளை, திகைப்பு, திகறடி, மாந்தம், அள்ளுமாந்தம், உப்புச நோய், கணச்சூடு, இசிவு நோய், இரைப்பு நோய், இளைப்பு நோய், மந்தார காசம், சுவாச காசம், சுவாசத் தொய்வு, ஈரம் எனத் தமிழில் பல பெயர்களில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்நோய் குறிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்த் தாக்கத்திற்கு பரம்பரைத் தன்மை, ஒவ்வாமை இயல்பு, பலவகை அலர்ஜிகள் காரணமாகின்றன!

ஆஸ்துமா பற்றிய தவறான எண்ணங்கள் :

« ஆஸ்துமா நோய் அச்சத்துடன் வெட்கப்படவேண்டிய, ஏளனமாகப் பேசப்படும், தலை குனிவை உண்டாக்கி அவமானம் தரும் நோய்.

«ஆஸ்துமா ஒரு தொற்று நோய்.

« ஆஸ்துமா வந்தாலே போகாது.

« ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாகக் காச நோயும் இருக்கும்.

« இந்நோய்க்காரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

« ஆஸ்துமா நோயுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் கண்டிப்பாக வரும்.

« இந்நோய் கண்டவர் அனைவரும் எப்போதும் கடற்கரை ஓரங்களில், மலை வாசஸ்தலங்களில் குளிர்ப் பிரதேசங்களில், ஏசி அறைகளில் வசிக்கவும் கூடாது. அங்குப் போகவும் கூடாது.

« இந்நோய் வந்தால் மற்றவர்கள் போல் சராசரி வாழ்க்கை வாழ முடியாது.

« இதய நோய், சர்க்கரை நோய் போலவே ஆஸ்துமா நோய்க்கும் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்.

அறிவியல் உண்மைகள்

« உயர் இரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்று இதுவும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு நோய். எய்ட்ஸ் போல் நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோயும் அல்ல. அச்சமும், அவமானமும் தேவையில்லாதது.

« ‘‘சார்ஸ்’’ போல் அதிநுண் கிருமிகளால் பரவுவதே தொற்று நோய்கள். ஆஸ்துமா, கிருமிகளால் பரவும் தொற்று நோயல்ல.

« அல்லோபதி மருத்துவத்தால் நன்கு கட்டுப்படுத்தவும், அல்லோபங்சர் அணுகுமுறையில் முழுவதும் சிகிச்சை அளித்துப் போக்கக் கூடிய பல நோய்களில் இதுவும் ஒன்று.

« அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆஸ்துமா நோய்க்காரர்களும் காசநோய் உள்ளதா என்றும், காசநோய்க்காரர்களுக்கு ஆஸ்துமா நோயும் உள்ளதா என்றுதான் பரிசோதிக்க வேண்டும்.

« திருமணம் இந்நோய்க்குத் தடை அல்ல. எல்லோரும்போல் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மனைவி வழி ஆஸ்துமா, ஒவ்வாமை நோய்கள் இல்லாமலிருப்பது நல்லது.

« பெற்றோர் இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்புகள் அதிகமே தவிர, கட்டாயம் ஒன்றும் இல்லை.

« இவைகளால் குறிப்பிட்ட சில வகையினருக்கு மட்டும் ஆஸ்துமா தாக்கம் அதிகமாகிறது என்று மருத்துவர்கள் உறுதியுடன் சொன்னாலொழிய, அச்சம் கொள்ளத் தேவையில்லை.

« இந்நோய் கண்ட பலர், பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், நடிகர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும் உலா வருகிறார்கள்.

« தீவிரமான உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. பின் இரவிலும், எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிட வேண்டாம். உணவு உண்டு 2_3 மணி கழித்துப் படுப்பது நல்லது

கருத்தரித்த காலத்தில் ரத்த அழுத்த ஆபத்து?

0
கர்பிணிகளுக்கு ஏற்படும் மிக அதிகமான ரத்த அழுத்தம் தாய்க்கும், குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஆபத்தை உருவாக்கும் என்று ஆன்லைன் இங்கிலாந்து மருத்துவ மாத இதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு விதமான ஆய்வு முடிவுக‌ள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இருதய நோய், பிரிஎக்லம்பேஷியா ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஎக்லம்பேஷியா என்பது கருவுற்றகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மிக அதிகமான ரத்த அழுத்தம் ஆகும். இது ஏற்பட்டால் தா‌ய்க்கும், குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஆபத்து உருவாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கர்பிணி
webdunia photoWD
கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது அவர்களின் வாழ்க்கையின் பின் காலத்தில் இருதய நோய் ஏற்பட 2 மடங்கு வா‌ய்‌ப்பு உள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டங்களில் இருதய நோய்க்கான அறிகுறி கருத்தரிப்புக்கு முன் உள்ள காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் நிலையில் அது அவர்கள் கருத்தரிக்கும் போது மிக அதிகமான ரத்த அழுத்தம் உருவாக வழிவகுத்துவிடும் என்று மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிகமான ரத்த அழுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பெண்களின் இறப்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. இந்த ஆய்வு சுமார் 30 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

கருத்தரித்த காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு, பின் காலத்தில் மிக அதிக ரத்த அழுத்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 4 மடங்கும், மரணம், மரணத்தை விளைவிக்காத இதய நோய், இரத்தம் உறைதல், ஸ்ட்ரோக் வர 2 மடங்கு‌ம் சாத்தியக் கூறுகள் இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நார்வே நாட்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 3494 பெண்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு இருதய நோய் தொடர்புடைய காரணிகளான ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த சர்க்கரை அளவு, பருமன், பாடி மாஸ் இன்பக்ஸ் ஆகியவை தொடர்பான விவரங்கள் கருத்தரிப்பு காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக மிக உயர் ரத்த அழுத்தம் இருதய நோய் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை பெண்களுக்கு 2 மடங்கு ஆபத்தை உருவாக்குகின்றன. அதேப்போன்று அதிக கொழுப்புச் சத்து, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கும், சாதாரண பெண்களை விட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது

ரத்த அழுத்தமா... என்ன சாப்பிடலாம்?

0
ன்று மனிதர்களை பல வகையான நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் முதன்மை வகிக்கிறது. இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்கள்.

நம் நாட்டில் 75 சதவிகிதம் பேர் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற பழமொழி போல் தினமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டும் நோய்தான் இந்த நீரிழிவு நோயும், இரத்த அழுத்த நோயும்.

ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருந்தால் இரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த இரத்த அழுத்த நோயை மௌன கொலையாளி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.

இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.

சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சித்தர்கள் பித்த வாத அழுத்தம் என்கின்றனர்.

மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்.

இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் இருந்தால் அவை இரத்தக் குழாய்களில் படிந்து இரத்தத்தில் அழுத்தம் அதிகரித்து இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கோபம், கவலை, அச்சம் உள்ளவர்களை இரத்த அழுத்தம் அதிகம் தாக்குகிறது. உடல் வலியும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையும் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வர 25 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை, இனிப்பு பண்டங்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட பானங்கள், செயற்கை வர்ணம் அல்லது வாசனை கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கேன்களில் அடைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது.

வெண்ணெய், நெய், கிரீம், மாமிசம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

உணவில் அதிகளவு கீரைகளும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் பிஞ்சு வகைகளையே அதிகம் சாப்பிடவேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வாயுவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும்.

உணவில் அதிகளவு காரம், புளிப்பு சேர்க்கக் கூடாது.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக உணவுக்குப்பின் சிறிது பழவகைகள் உண்பது நல்லது. அதில் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு தூங்கச் சென்றால் நல்ல நித்திரை காணலாம். நல்ல நித்திரை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

மனதை அதிகம் பாதிக்கும் இடங்களுக்குச் செல்வதையோ, நிகழ்வுகளைப் பார்ப்பதையோ தவிர்ப்பது நல்லது.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சிறிது நேரம்அமர்ந்து தியானம் செய்து, பின் பால் அருந்திவிட்டு படுக்கச் செல்லவேண்டும்.

ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளை பெட்ரோல் இல்லா வாகனம் என்பார். அதாவது வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் போகும்போது வாகனம் எங்கு வேண்டுமானாலும் நின்று போகலாம்.

அதுபோல்தான் குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளின் நிலையும். அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், அதனை முறையாகவும் சாப்பிட்டு வரவேண்டும். சில நேரங்களில் இவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், தூக்கம் போன்றவை ஏற்படும். உடல் சோம்பலாகவே இருக்கும். உடலில் வலி ஏற்படும். அப்போது இவர்கள் சிறிது குளுக்கோஸ் கலந்த நீர் அருந்துவது நல்லது. அல்லது சர்க்கரை கலக்காத எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். கேழ்வரகு கூழ், கம்பு கூழ் மிகவும் சிறந்தது. எலும்பு சூப் செய்து அடிக்கடி அருந்த வேண்டும்.

மதுபானத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும்.

பாதாம் பருப்பு - 2,

முந்திரி பருப்பு - 2,

பேரிச்சை - 2,

உலர்ந்த திராட்சை - 4,

இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

குடலில் வாயுத்தன்மை அதிகரிக்காமல் பார்த்தக்கொள்ள வேண்டும். மேற்கண்ட வழிகளை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் ரத்த அழுத்த நோய்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

*உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...*
உலகில் இன்று பெரும்பாலானோரை வாட்டி வதைப்பது உயர் ரத்த அழுத்த நோய்தான். இதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், சிறுநீரகங்கள் மற்றும் மூளை போன்றவைகளும்
பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, ரத்த அழுத்த அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பது அவசியம்.
அதற்கான சில குறிப்புகள் :

* ரத்த அழுத்த அளவை அடிக்கடி பரிசோதிக்கவும்.

* ரத்த அழுத்த அளவு, உயர் நிலையில் 120 எம்எம்எச்ஜியும், கீழ் நிலையில் 80
எம்எம்எச்ஜியும் இருக்கலாம். இந்த அளவுகளை தாண்டினால், உடனடியாக மருத்துவரை
அணுகவும்.

* உணவுக்கட்டுப்பாடு மூலம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கலாம். அதிக
காரம், புளிப்பு, உப்பு மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட மற்றும் கொழுப்புச்
சத்துக்கள் அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும்.

* நடைபயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது ரத்த அழுத்ததை கட்டுக்குள்
வைத்திருக்க உதவும்.

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List