Wednesday, April 28, 2010

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா

“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்” என்று கூறுகிறார்களே. மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற உணர்வை இந்தப் பழமொழி ஏற்படுத்துகிறதே? இதன் உண்மையான உள் அர்த்தம்தான் என்ன?

பழமொழி காலப்போக்கில் மருவி புதுமொழியாக மாறியதற்கு நீங்கள் கூறிய பழமொழியே உதாரணம். ஏனென்றால் “ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்” என்பதுதான் உண்மையான பழமொழி.

அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சௌபாக்கியங்கள் கூடி வரும். ஏனென்றால் ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பௌர்ணமி நாளாக அமைந்து விடுகிறது.

எனவே அவர்கள் ஏதாவது கலை/வித்தையில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனைக் கொண்டு மற்றவர்களை ஆளுதல் அல்லது மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்தல் போன்றவற்றைப் பெற்றவர்களாக இருப்பர். இங்கே “ஆளுதல்” என்ற வார்த்தையை அரசு பதவி என்று கொள்ளக் கூடாது.

உதாரணமாக கூற வேண்டுமென்றால், ஒரு நடிகர் குறிப்பிட்ட மாநில மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார் என்று கூறுக் கேட்டிருக்கிறோம். அது போல் பிறர் மனதில் இடம்பிடிப்பதைத்தான் இந்தப் பழமொழியில் அரசாளுதல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் எனக் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அடுத்ததாக பின் மூலம் நிர்மூலம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்கள் எதிரிகளை வீழ்த்தக் கூடியவர்களாக இருப்பர். எனவே அதனைப் “பெண் மூலம் நிர்மூலம்” எனக் கூறுவது தவறு.

நிர்மூலமாக்குதல் என்றால் எதிரியை இருந்த சுவடு தெரியாமல் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். இந்த சக்தி மூலம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு இருக்கும். அதற்கு காரணம், அவர்களின் நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார். அதனால்தான் எதிரிகளை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆண்/பெண் என்ற பேதம் கிடையாது

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List