உருண்டைக்கு
- கடலைபருப்பு – அரை கப்
- துவரம்பருப்பு - 1 மேசைகரண்டி
- காய்ந்தமிளகாய் – 3
- சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 / 4 கப்
- பொடியாக நறுக்கிய பூண்டு – 1 மேசைகரண்டி
- பொடியாக நறுக்கிய மல்லிதழை – 1 மேசைகரண்டி
- தேங்காய் துருவல் - 1 மேசைகரண்டி
- உப்பு – தேவையான அளவு
குழம்புக்கு
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி - 3
- மிளகாய்த்தூள் - 2 1 / 2 தேக்கரண்டி
- தனியாதூள் – 1 1 / 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
- புளி – எலுமிச்சை அளவு
- பூண்டு - 10 பல்
- கருவேப்பில்லை, மல்லிதழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
- உருண்டைக்கான பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு வரமிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
- உருண்டைக்கென கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து ஒன்றாக உருட்டிக் கொள்ளவும்.
- இவற்றை ஆவியில் அரைவேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
- எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, புளி தண்ணீரையும் ஊற்றவும்.
- அதில் மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கொதிக்கும்போது, செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.
- 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், கருவேப்பிலை, மல்லிதழை தூவி இறக்கவும்.
குறிப்பு
- நீர்க்க இருக்கும் இந்த குழம்பு குழைவான சாதத்துக்கு நன்றாக இருக்கும்.
- இதையே கெட்டியாக வைக்க விரும்புவர்கள் தேங்காய் துருவலுடன், 5 முந்திரிபருப்புகளை வைத்து அரைத்து கடைசியில் சேர்த்து இறக்கினால் கெட்டியான குழம்பு கிடைக்கும்.
0 comments:
Post a Comment