தேவையான பொருட்கள்
- சோயா உருண்டைகள் – 1 1 /2 கப்
- கெட்டித் தயிர் – 2 கப்
- சோம்பு – 1 /2 தேக்கரண்டி
- நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தழை – 1 1 /2 மேசைக்கரண்டி
- மல்லித்தூள் - 1 1 /2 மேசைக்கரண்டி
- மிளகாய்த்தூள் - 1 1 /2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 3 /4 தேக்கரண்டி
- உப்பு - 1 1 /2 மேசைக்கரண்டி
- எண்ணெய் – பொரிப்பதற்கு
அரைக்க
- சின்ன வெங்காயம் – 1 /2 கப்
- பூண்டு – 8 பல்
வறுத்து அரைக்க
- முந்திரிபருப்பு - 15
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் சோயா உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு, உருண்டைகளைப் பிழிந்து வைக்கவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- எண்ணெய் ஊற்றாமல் முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் லேசாக வறுத்து, முன்பு வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- பின் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
- குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- கடைசியாக சோயா உருண்டைகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை
- கொதிக்க விடவும்.
குறிப்பு
சோயா உருண்டை குழம்பு சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment