Thursday, April 29, 2010

ஆன்மிக கதைகள் » இந்து

0


ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றி திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ணநாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

"கிருஷ்ணா' என்ற இந்த வார்த்தையில் என்ன இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,""கிருஷ்ணா! கிருஷ்ணா!''என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்துவிடும்? எனக்கு பசிக்கிறது? உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறுபோட முடியுமா?'' என்று கத்தினான்.

பெரியவர் அந்த இளைஞனிடம், ""கிருஷ்ண நாமத்தை சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,'' என்றார்.

இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலு<ம், அந்த பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ணநாமத்தை சொல்ல முடிவெடுத்தான். ஊருக்கு அடுத்தாற்போல் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான். அவன் வாயில் "கிருஷ்ணா' என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை. திடீரென்று அந்தப்பக்கம் யாரோ வருவது போல சப்தம் கேட்டதும், ஒரு மரத்தின் மீது ஒளிந்து கொண்டான் இளைஞன்.

ஒரு வழிப்போக்கன் அந்த மரநிழலில் அமர்ந்து கொண்டு வந்த கட்டுச்சோற்றை சாப்பிட்டான். அசதியில் அங்கேயே தூங்கி விட்டன். இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் கண்விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்துவிட்டு வழிப்போக்கன் சென்றுவிட்டான். கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான். ஆனால், வந்த வேகத்தில் அவன் அப்படியே நின்றுவிட்டான். எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றை சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை. உண்மையில் கிருஷ்ணநாமத்திற்கு மகிமை இருக்குமானால், இந்த சாப்பாட்டை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.

திரும்பவும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். சூரியன் மறையும் வேளை வந்தது. அப்போது காட்டுப் பாதையில் சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மரநிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர். கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.

தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான். அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். ஆனால், கள்வர் தலைவன், ""இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான். அந்த சோற்றை அவனுக்கே கொடுப்போம்!'' என்று சொல்லி இளைஞனை சாப்பிடும் படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான். இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள், உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர். இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடும் இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான். "நம்பிக்கையில்லாமல் கிருஷ்ணநாமம் சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே' என்று எண்ணியவன், அழியாத செல்வம் கிருஷ்ணநாமம் தான் என்ற முடிவுக்கு வந்தான். காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்த பணத்தை உண்டியலில் போட்டான். "இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,'' என்று கிருஷ்ணனிடம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான்.

Wednesday, April 28, 2010

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் கோட்டை கட்டி வாழ்வாள் என்பது உண்மையா?

0
கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்ட” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப்போகிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறி வந்தனர்.

இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம்.

உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக் கூடியது சூரியன். எனவே, சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார்.

எனது அனுபவத்தில் கேட்டை நட்சத்திரத்திலபிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏராளமானோரை பார்த்திருக்கிறேன். அரசாணை பிறப்பித்தல், நலத்திட்டங்கள் அறிவித்தல் என அரசை ஆளும் நபர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் இளகிய மனதும், நன்றாகப் பழகுமகுணமும் உடையவர்களாஇருப்பதால் அடுத்தவர்களின் மனக்கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள்.

எதையும் ஆட்சி செய்யும் தன்மையைப் பெற்றிருந்தாலும், கொடுங்கோல் ஆட்சி செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள். உபசரிக்கும் குணம், சரித்துப் பேசும் குணம் இவர்களுக்கு இருப்பதால் எப்போதும் அவர்களைச் சுற்று ஒரு நட்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீச்சம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகைக் கோளுடன் சேராமல், 6/8க்கு உரியவனுடன் சேராமல், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் பிடிப்பார்/ஆள்வார்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா

0
“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்” என்று கூறுகிறார்களே. மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற உணர்வை இந்தப் பழமொழி ஏற்படுத்துகிறதே? இதன் உண்மையான உள் அர்த்தம்தான் என்ன?

பழமொழி காலப்போக்கில் மருவி புதுமொழியாக மாறியதற்கு நீங்கள் கூறிய பழமொழியே உதாரணம். ஏனென்றால் “ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்” என்பதுதான் உண்மையான பழமொழி.

அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சௌபாக்கியங்கள் கூடி வரும். ஏனென்றால் ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பௌர்ணமி நாளாக அமைந்து விடுகிறது.

எனவே அவர்கள் ஏதாவது கலை/வித்தையில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனைக் கொண்டு மற்றவர்களை ஆளுதல் அல்லது மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்தல் போன்றவற்றைப் பெற்றவர்களாக இருப்பர். இங்கே “ஆளுதல்” என்ற வார்த்தையை அரசு பதவி என்று கொள்ளக் கூடாது.

உதாரணமாக கூற வேண்டுமென்றால், ஒரு நடிகர் குறிப்பிட்ட மாநில மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார் என்று கூறுக் கேட்டிருக்கிறோம். அது போல் பிறர் மனதில் இடம்பிடிப்பதைத்தான் இந்தப் பழமொழியில் அரசாளுதல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் எனக் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அடுத்ததாக பின் மூலம் நிர்மூலம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்கள் எதிரிகளை வீழ்த்தக் கூடியவர்களாக இருப்பர். எனவே அதனைப் “பெண் மூலம் நிர்மூலம்” எனக் கூறுவது தவறு.

நிர்மூலமாக்குதல் என்றால் எதிரியை இருந்த சுவடு தெரியாமல் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். இந்த சக்தி மூலம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு இருக்கும். அதற்கு காரணம், அவர்களின் நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார். அதனால்தான் எதிரிகளை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆண்/பெண் என்ற பேதம் கிடையாது

குட்டியானை

0

விதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ

சிட்னி Taronga மிருகக்காட்சிச்சாலைக்காரருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம். இருக்காதா என்ன, சில மாதங்களுக்கு முன்னர் தான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானைக் குட்டி “Luk Chai" ஐ ஈன்றெடுத்த மண் என்ற பெருமையோடு லுக் சாயை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் வேளை இன்னொரு குட்டியும் இன்னும் சில மாதங்களுக்குள் பிறக்கப் போகிறதே என்ற இன்னொரு இனிப்பான செய்திதான் அது. இப்போது வளர்ந்து வரும் Luk Chai இன் தாய்க்காரி Thong Dee படுகண்டிப்பானவள். Luk Chai பால் குடிக்க வரும்போதெல்லாம் நெட்டித் தள்ளுவாள். அத்தோடு இவனின் வால்தனத்தை எல்லாம் கண்டு பேசாமல் இருக்கமாட்டாள். மண் மேட்டில் ஏறுகிறேன் பேர்வழி என்று மெல்ல மெல்லத் தாவி ஏறிப்போய் சரார் என்று இவன் வழுக்கி விழுந்த அனுபவத்தை எல்லாம் பார்த்துச் சகிக்காமல் தன் கையுக்குள்ளும்,காலுக்குக்குள் பொத்திப் பொத்தி வளர்த்தாள். ஆனால் Luk Chai அடக்குமுறையெல்லாம் துச்சமென்று மதிப்பவன். மிருகக்காட்சிச்சாலைப் பணியாளர்களுக்கே பெண்டு நிமித்தும் வேலை வைப்பான். கறுத்தப் பெட்டி போட்ட பந்தை உருட்டி முன்னங்காலால் சடாரென்று கோல் போடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். தன் தாய்க்கு மட்டுமல்ல சித்திமார் வந்தால் கூட தன் பந்து விளையாட்டில் பங்கு கொடுக்காத கஞ்சப் பிறவி இவன்.

இப்படி Luk Chai தனிக்காட்டு ராஜாவாக ஆறு மாதங்களாக வளைய வரும் போது, அவனது சித்தி Porntip இன் உடலில் பெருத்த மாற்றம் மெல்ல மெல்ல ஏற்படுகிறது. இதற்கிடையில் மெல்பன் மிருகக்காட்சிச் சாலையிலும் Mali என்ற பெண் குட்டி பிறந்து விட்டாள். ஆனால் அவள் பெண் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசித்து விட்டார்கள். Porntip மிகுந்த பொறுமைசாலி என்று பெயரெடுத்தவள். தன் வயிற்றுக்குள் நூற்றுச் சொச்சம் கிலோ எடையுள்ள குழந்தையைச் சுமக்கிறோம் என்று எள்ளளவு வருத்தமோ வலியோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாளாம். Porntip தன் சுகமான சுமையை இறக்கும் காலமும் வந்தது. ஆனால் அதுவரை அவளுக்கு மட்டுமல்ல மிருகக்காட்சியில் விசேடமாக வரவழைக்கப்பட்ட மருத்துவருக்கும், அவரோடு அங்கே இருந்த பணியாளர் குழாமுக்கும் தெரிந்திருக்காது Porntip மிகப்பெரிய சவாலைச் சந்திக்கப் போகின்றாள் என்று.

மார்ச் 2010 ஆரம்பக் கிழமை அது. Porntip இருப்புக் கொள்ளாமல் தன் இருப்பிடத்தில் அங்குமிங்கும் அலைகிறாள். வயிற்றுக்குள் இருக்கும் தன் பிள்ளை அலுங்காமல் குலுங்காமல் வெளியே வரவேண்டும் என்ற கவலையை விட, தன் வயிற்றுக்குள் இருக்கும் வரை இதமான நிலையில் இருக்க வேண்டும் என்ற பெருங்கவலை தான் அவளைப் பீடித்தது. அதனால் ஒரு வாரகாலமாக உறக்கமற்ற இரவுகளில் கூட தன் இருப்புக் கூண்டின் இரும்புச் சட்டங்களில் தன் காலை ஒருக்களித்து வைப்பதும் பின்னர் இறக்குவதுமாக இருக்கிறாள். இதையெல்லாம் தூக்கம் தொலைத்த சிவப்புக் கண்களோடு மருத்துவர் குழாம் நேரடியாக வீடியோ கருவி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அந்த அவதானம் மெல்ல மெல்லக் கவலையாக உருவெடுக்கிறது. இதற்கு மேல் பொறுமையிழந்த அவர்கள், மெல்ல எழும்பி வந்து Porntip இன் உடலைப் பரிசோதிக்கிறார்கள், அல்ட்ரா சவுண்ட் கருவி மெளன மொழி பேசுகின்றது. அந்தக் கணம் அவர்கள் உடைந்து போகிறார்கள், விரக்தியோடு ஆளையாள் பார்த்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.




மார்ச் 8, 2010

Taronga மிருகக்காட்சியின் பேச்சாளர் ஊடககங்களுக்குத் தன் வாயைத் திறக்கிறார். Porntip உடலில் இது நாள் வரை சுமந்து வந்த குட்டி இறந்து விட்டது என்ற அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் முதன்மைச் செய்தியாக வந்து கவலை ரேகையைப் பரப்புகின்றது. அதைவிடக் கொடுமை Porntip இன் உடலில் இருக்கும் அந்த செத்த பிள்ளையை வெளியே எடுக்க முடியாது, அது இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் அப்படியே தாயின் உடலுக்குள் சமாதியாய் இருக்க வேண்டியது தான். செத்துப் போன குட்டியை எடுக்கும் முயற்சியில் Porntip இன் உயிருக்கே உலைவைத்து விட வேண்டிய துர்பாக்கிய நிலை வந்து விடும் என்று கூட இருந்த வைத்தியர்கள் கவலையோடு சொல்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் Porntip இருப்பாளோ என்னமோ, தன் இருப்பிடத்தில் இன்னும் ஒரு அமைதி நிலையற்று துர்பாக்கியவதி போன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.


மார்ச் 10, 2010


அதிகாலை மூன்று மணியைத் தொடுகிறது. இது நாள் வரை தொடர்ச்சியாக ஒவ்வோர் இரவும் மருத்துவ தீவிர கண்காணிப்பில் இருந்த Porntip களின் இற்கு இதெல்லாம் இல்லாத ஒரு இரவு. அவள் மட்டும் தன் கூட்டில் இருக்க,Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளோடு Thong Dee உம் ஒருக்களித்து ஒரே கூண்டில் படுத்திருக்கிறாள். Thong Dee இன் வால் பையன் Luk Chai நேரம் மூன்று மணியாகியும் நித்திரை வராமல் அதே கூண்டுக்குள்ளே சுற்றும் வளைய வந்து கொண்டிருந்தான். இந்த நேரம் நீச்சல் அடிக்கவும், கால் பந்து விளையாடவும் ஆட்களைத் தேடியிருப்பான் போல. Luk Chai இற்கும் சிறிது நேரத்தில் களைப்பு வந்து தன் தாய் Thong Dee இன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெருக்கமாகத் தூங்கிப் போகிறான்.

ஒரு வீடியோ கண்காணிப்புக் கருவி மட்டும் அமைதியாக இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

நேரம் அதிகாலை 3.27

Porntip தன் அரைத்தூக்கத்தை உத றிவிட்டுத் தன் கூண்டில் இருந்து வெளியே ஓடுகிறாள். கூண்டின் புறப்பகுதியில் இருந்த சதுக்கம் அது. அங்கே போனதும் தான் தாமதம் அப்படியே தன் வயிற்றில் இருந்ததைக் கொட்டுகிறாள். அந்து ஒரு சதைப்பிண்டமாக சதுக்கத்தின் குழிக்குள் போய் விழுகிறது. இது நாள் வரை மலையே சரிந்தாலும் தன் கவலை தன்னோடு என்று க ர்ப்ப உபாதையை அடக்கப் பழகிக் கொண்ட Porntip இந்தக் கணம் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு பெருங்குரலெடுத்தவாறே அழுகிறாள். சத்தம் கேட்டதும் தான் தாமதம் படுத்திருந்த யானைகள் திடுக்கிட்டு எழுந்து ஆளுக்கொரு திசையாக பிளிறிக் கொண்டே போகின்றன. Tang Mo என்பவள் மட்டும் Porntip இன் சத்தம் வரும் திசையைக் கண்டுணர்ந்து அந்தப் பக்கம் ஓடுகின்றாள். அங்கே Porntip குழியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறாள். இவளை ஆறுதல்படுத்துமாற் போல Tang Mo என்ற அந்தப் பெண் யானை பக்கத்திலேயே நிக்கிறாள். ஆனால் இருவருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்.

காலை புலர்கிறது. யானைப்பணியாளர்கள் இவர்களின் இருப்பிடத்துக்கு வருகிறார்கள். ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது. மெல்ல மெல்லத் தயங்கி அந்தச் சதுக்கத்துக்கு வருகிறார்கள். அங்கே Porntip உம் Tang Mo நிற்கும் கோலமும் கீழே அந்தக் குழியில் ஒரு உருவம் மிதப்பதையும் பார்த்த கணம் திடுக்கிடுகிறார்கள். அந்த வயதான ஆண் உதவியாளர் உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கூட வந்த அந்த இளம் பெண் பணியாளரை ஒரு துணியைச் சீக்கிரமாகக் கொண்டு வருமாறு கட்டளை இடுகின்றார். அவள் அழுதுகொண்டே ஓடிப்போய் எடுத்து வருகிறாள். முதலுதவி ஆரம்பமாகிறது, யாருக்கு? குழிக்குள் அசைந்து கொண்டிருக்கும் அவனுக்குத் தான்.

தன் தாய் Porntip பக்கபலமாக இருக்க நடந்து முடிந்த முதலுதவியும், உடனடி சக்தி மருந்தும் அவனைத் தெம்பாக்குகிறது. காலனுக்குக் கண் அடித்து விட்டு மெல்ல எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் உடனே முடியவில்லை. இன்னும் மெல்ல இன்னும் மெல்லெ என்று எழும்பி எழும்பி மீண்டும் விழுவதும் சறுக்குவதுமாக இருக்கிறான், ஆனாலும் விடவில்லை. தன்னை நெருங்கி வந்த சாவையே விரட்டியவன், தனக்கு மரண சாசனம் எழுதியவர்களின் நினைப்பையே மாற்றியவன் அல்லவா அவன். ஆம் மெதுவாக....ஆனால் நிதானமாக...உறுதியாக எழ ஆரம்பித்தான் ஐந்து மணி நேரம் கடந்து. மிருகக்காட்சிச் சாலைப் பணியாளர்களின் கண்கள் ஆனந்தத்தால் அல்ல ஆச்சரியத்தால் நிரம்பியதை கண்ணீரால் உறுதிப்படுத்தினார்கள். Porntip முறுவலிப்போடு தன் சிங்காரப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் வந்து வேண்டிய மட்டும் ஆசை தீரத் மடியில் பாலைக் குடிப்பதை அமைதியோடு அனுமதிக்கிறாள். 116 கிலோ குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கின்றது.






மிருகக்காட்சிச் சாலை இயக்குனர் Cameron Kerr, சொன்னார் இப்படி " his birth was set to rewrite the textbooks". மருத்துவ நிபுணர் Dr Thomas Hildebrandt (Berlin Institute for Zoo and Wildlife Health), such an outcome after a protracted labour has never been seen before" என்று சொல்லி வியக்கிறார்.


Sydney's baby elephant 'miracle': he's alive


இப்படிக்கொட்டை எழுத்துக்களில் சிட்னியின் முன்னணிப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுமளவுக்குப் பிரபலமாகி விட்டான் இவன்.

Pathi Harn என்று அவனுக்கு அவனின் தாய் வழி தேசமான தாய்லாந்து மரபுப் பெயரும் வைத்தாகி விட்டது அவன் பெயருக்கு அர்த்தமே அதிசயம் (miracle) தானாம்.

இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.



கண்களை அகல விரித்துக் கொண்டே தன் தாயின் மடி தரும் நிழலில் அவளோடு ஒட்டியவாறே மெல்ல நடக்கிறான் இந்த விதியைத் துரத்திய யானைக் குட்டி.

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

0
எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.

எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது.

பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.

சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.



சில குடும்பங்களில் என்ன நடக்கிறது? பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் "என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு "என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் "என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ " என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா? ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் "நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.



பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் "எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் " என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, "இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும்.

ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, "பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை.

பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும்.

இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது அக்காவின் மகன் விளையாட்டில் தோற்றுவிட்டதால் றிமோட்டை எறிந்துவிட்டு அழுதுகொண்டு ஓடி வந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.

இப்போ, "நீ தோத்துவிட்டாய் ந ந ந ந" என்று சின்னப்பிள்ளைகள் நெழிப்பது போலும் பழிக்கலாம். அல்லது “தோத்துப்போறதும் ஒருவிதமான பாடம் தான் நீங்கள் போனதடவை நல்லா விளையாடி வென்றனீங்கள்தானே என்று உற்சாகப்படுத்தித் திரும்ப விளையாட வைக்கலாம். விளையாட்டாக நெழித்துப் பழிக்கும்போதும் சுயமதிப்பீடு குறைக்கப்படும். ஆனால் முன்பு வென்றதை நினைவுபடுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் விளையாட வைக்கும்போது அப்பிள்ளையின் சுயமதிப்பீடு அதிகரிக்கப்படும். ‘இதென்ன சாதாரணமான விளையாட்டுப் பற்றியது இதில் என்ன இருக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குழந்தை வளர்ந்துவந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்படும்போது அதன் சுயமதிப்பீடு அவ்வளவாகப் பாதிக்கப்படாது; ஏனென்றால் அந்தப்பிள்ளைக்குத் தெரியும் தன்னால் இதிலிருந்து மீளமுடியுமென்று.



உயர்ந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள் எப்போதும்:

*பிறரை மட்டுமே நம்பியிருக்கமாட்டார்கள்.
*என்னால் முடியும் என்று பெருமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள்.
*பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள்.
*எப்போதும் தேடலுடன் புதியவற்றைத் தேடிக்கற்றுக் கொள்வார்கள்.
*மகிழ்ச்சியையும் சோகத்தையும் சரிசமமாக எதிர்கொள்வார்கள்.
*கோபத்தையும் எரிச்சலையும் கையாளத் தெரிந்திருப்பார்கள்.
*மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.


குறைந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள்:
*புதிதாக எதையும் செய்யப் பயப்படுவார்கள்.
*என்னை யாருக்கும் பிடிக்கவில்லை,நான் யாருக்கும் தேவையில்லை என்று எண்ணுவார்கள்.
*தன் பிழைக்கும் மற்றவர்களையே குறை கூறுவார்கள்.
*தன்னையும் தன் திறமைகளையும் குறைத்தே மதிப்பிடுவார்கள்.
*கோபம், கவலை, மகிழ்ச்சி இப்படி எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள்.
*சட்டென்று யாரையும் நம்புவார்கள். நம்பி அவர்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள்.


சுயமதிப்பீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?

*இயலாமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடல்.

*பக்கத்திலிருப்பவர்களின் கருத்தை விட யாருக்கு சுயமதிப்பீடு அதிகரிக்க வேண்டுமோ அவர்களை மட்டும் கணக்கிலெடுத்தல்.

*என்னைச் சுற்றியிருப்பவர்களால் "நான் நானாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன்" என்று காட்டுதல்.

*பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.

*தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நான் உன்னிலும் பெரியவன் , நான் உன் சரி பிழைகளை அடையாளம் காணும் உயர்ந்த நிலையிலிருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமலிருத்தல்.

*அந்நபரால் செய்து முடிக்கக்கூடிய சின்னச் சின்ன நோக்கங்களையும் , குறிக்கோள்களையும் நினைவூட்டல்.

*குறிக்கோள்களைப் படிப்படியாகத்தான் அடைய முடியும் என்று நினைவூட்டல்.

*எப்போதும் அந்நபரின் நேர் தன்மைகளை(Positiveness), திறமைகளைப் பற்றி உரையாடுதல்.

*பிழை விட்ட காரியத்தை அடுத்த முறை எப்படி இன்னும் திறம்படச் செய்யலாம் என்று அந்நபரோடு சேர்ந்து கலந்துரையாடி நல்ல வழிகளைக் கண்டடைதல்.

*முன்பு நடந்த விடயங்களில் இருந்து பட்டறிதல்.

உன்னையறிந்தால் – நீ

உன்னையறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை

வணங்காமல் நீ வாழலாம்.

Tuesday, April 27, 2010

Simple Tips to Motivate Yourself to Exercise

0

You know you need to work out, but you’re having trouble getting up the enthusiasm. How do you find motivation to exercise when you just don’t feel like getting off your butt? I ask myself this question every now and then, and I have the feeling I’m not the only one.

There are a million ways to motivate yourself to exercise, actually, but these are a few that have worked for me.

  • Have fun. If you hate running, don’t go to the track for exercise. Find something you like. The list of different kinds of exercises are nearly endless. The only really important thing is to get your body moving and your heart rate up.
  • How you feel after a workout. I always feel great after a good workout. It’s a high. And I let that motivate me the next time.
  • Calories burned. If you count calories (and it’s really one of the most effective ways to lose weight), you know that the more you exercise, the more calories you burn — and the bigger your calorie deficit.
  • How you’re going to look. Imagine a slimmer, fitter you. Now let that visualization drive you.
  • Change it up. Even if you have a routine you enjoy, mix it up from time to time. Try entirely different exercises. You can check out a tape at the library and try yoga or kick boxing for an afternoon. This will not only keep you interested, it will break your muscles out of their routine and help produce better results.
  • Get a buddy. Exercising with a friend introduces a positive kind of peer pressure. You will be more likely to go to the gym if you know someone is waiting there for you. Talking and laughing while exercising will also keep you from being bored.
  • An exercise log/graph. For some reason, writing it down is extremely important. Really. Do it for a week and you’ll see what I mean.
  • Get appropriate clothing. If you don’t have the appropriate clothes for the excercise, it can be irritating, uncomfortable, frustrating, or even unsafe. If you exercise outside after dusk, be sure you have reflective clothing to prevent traffic accidents. Also be sure the clothing looks nice; if you don’t like the way your clothing looks, you may feel uncomfortable, and less likely to exercise.
  • Pack Ahead of Time: An iPod, athletic shoes, a towel… whatever. Walking around the house trying to find stuff is a good time to lose your resolve. Put everything together in your gym bag. When you finish working out, take out things that need to be laundered and replace them immediately.
  • Have a Goal. What do you want to achieve? Make it specific, make it meaningful, make it obtainable. Be sure to have short-term benchmarks along the way. It’s OK to change your goals if the original plan doesn’t work, but have a goal. Regularly evaluate how you are doing on your goals.
  • Success stories. I find the success stories of others incredibly inspirational. If a fitness website has success stories, I’ll almost always read them.
  • Reward Yourself. Have a healthy reward when you reach a goal. Buy yourself that cute pair of bike shorts. Go for a weekend hiking tri. Soak in the sauna for your “workout” that day. Buy a new yoga video. Whatever works for you to celebrate in line with your healthy lifestyle!

Regular Health Mistakes...

0
All of us make little health mistakes that cause damage to our bodies in the long run - simply because we are unaware we are doing something wrong. Here are some of the most common mistakes made by many of us.

Crossing our legs
Do you cross your legs at your knees when sitting? Although we may believe that this is the lady-like elegant way to sit, sitting this way cuts down circulation to your legs. If you don"t want varicose veins to mar the beauty of your legs and compromise your health, uncross your legs every time you realise you have one knee on top of the other. The best way to sit is to simply place both legs together on the floor, balancing your weight equally. If you feel like changing position, instead of crossing your legs, simply move both legs together to one side. As an alternative, you could also consider crossing your legs loosely at the ankles. This is a classically elegant way to sit, and is far better for your legs and your health than sitting with your legs crossed at your knees.


Not changing our toothbrush
How often do you change your toothbrush? Most of us wait until most of the bristles have either fallen off, or are in such bad shape that we"d be embarrassed to pull out our brush in public. However, since not many of us need to pull out our brush in public, we carry on with our frayed one until we lose it. Replace your toothbrush often. Damaged bristles can harm the enamel, and don"t massage your gums well. If you find brushing your teeth a pain like I do, but know you must do it, you might as well be doing it right. Imagine going through the annoyance of brushing your teeth twice a day only to find out that you"re damaging your enamel every time you clean your teeth. Also, use a brush with soft bristles unless your dentist has advised otherwise.


Eating out often
There are oils that are high in cholesterol, and oils that cause little harm and are better for your heart. However, no matter how light the oil is, it is never a good idea to eat too much of it. Avoid fried foods.Remember that in all probability your favourite Indian food restaurant throws a huge, HUGE chunk of butter in a tiny bowl of dal. Rita, who worked in the kitchen of a 5 star hotel, was shocked when she saw the cook chop a 500gm butter slab in half, and throw half into a Paneer Makhani dish. No wonder the customers left licking their fingers. And no wonder they felt so stuffed and heavy afterwards. Limit outdoor eating unless you know that you"re getting served light and healthy food.

Skipping breakfast
Never, ever skip breakfast. Remember, when you wake up in the morning it"s been around 10-12 hours since your last meal. Your body needs food now, more than at any other time. Eat a heavy breakfast. You will then be busy through the day, and the calories will get expended quickly. If you are trying to diet, eat a light dinner. Here are some more common health mistakes we make. Being informed and making a few changes can help make us feel a whole lot better.


High heels
High heels sure look great, but they're murder for your back. This however doesn't mean you should steer clear of stilettos. Wear them, but not when you know you will be walking around a lot. Wear them when going out for lunch or dinner - when the only walking you will be doing is to your car, to the table, and back. Avoid high heels when you are going somewhere on foot. If you are constantly tempted to wear your heels, take a good look at your flats. Is there something about them you dislike? Invest in a new pair of beautiful flats or shoes with a low heel. Buy something you love, that you will enjoy wearing. If possible, get a matching bag. You will then enjoy your flats as much as you do your heels.


Sleeping on a soft bed
You don't have to sleep on the floor be kind to your back, but do make sure you have a firm mattress. Although a mattress on springs is soft and lovely to sink into, it's bad for your back. If you already have an old bed with springs, you don't need to invest in a new one - simply get a thick wooden plank put over the springs, and place the mattress on the plank. Similarly, if your mattress is old and lumpy, throw it out and get a new one. Your neck and your back will thank you. The same rule applies to sofas. If you will be spending hours on a sofa, get a firm yet comfortable one. Sofas you completely sink into are not the best idea.


Pillows
No matter how comfortable sleeping with ten cushions is, have pity on your neck and resist. Sleep with one pillow, and make sure it is not too thick. If your pillow gets lumpy, discard it and go for a new one. Get a thin pillow if you sleep on your stomach, and something a little thicker if you sleep on your back, to give your neck adequate support


Not exercising
So all of us know we should exercise more, but many of us don't. This is a health mistake we consciously make! And why is that? Simply because we refuse to admit the damage we are causing to our bodies by not working out. A number of people only start working out once they've experienced a warning signal. Don't wait for a heart attack to strike before you decide to opt for a lifestyle change. Make the change now. You don't need to train for the marathon to be in top shape. Half an hour of brisk walking three to four times a week will make a world of difference to your health. You could then increase this to forty minutes, four times a week - and you're all set. If you haven't exercised for a week, you're making a mistake.

Sunday, April 25, 2010

பாலூட்டும் தாய்மார்களுக்கு

0


1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.

2. பால் அதிகமாக சுரக்க ‍- ஹார்லிக்ஸ், ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும்.
ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலூட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலூட்டுவது நல்லது.

3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம். குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது. மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது.


4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், உடம்பில் காற்று போய்விடும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.

5.உடம்பில் காற்று போகாமல் இருக்க, தாய்மார்கள் இர‌ண்டு காதுக‌ளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ள‌வும்.
காலில் என்னேர‌மும் செருப்பு அணிய‌வும்.
இர‌வில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ள‌வும்.
இப்ப‌டி செய்வ‌தால் ந‌ர‌ம்புகளில் காத்து ஏறுவ‌தை த‌விர்க்க‌லாம்.

6.எலும்புகள் வலுவடைய‌ சிக்கன், மட்டன், ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை மூன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும். பாலும் ந‌ல்லா சுர‌க்கும்.


7. பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம், பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும். இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டலாம்.

8. வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும்.
[இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வளவாக விழாது.

குழந்தைகளின் உடல் வலிமை பெற

0
காரட் , தக்காளி சாரு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெறும்
தினமும் ஒரு கீரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்,
தினம் ஒரு முட்டை கொடுங்கள்

குழந்தைகள் அழுவதற்கான ஏழு காரணங்கள்

0

புதிதாய்ப் பிறந்த ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை கூட நாள் ஒன்றிற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை அழும். முதல் முறையாக தாயாகவோ தந்தையாகவோ ஆகியிருக்கும் உங்களுக்கு குழந்தை எதற்காக அழுகிறது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். பசியா, ஜலதோஷமா, தாகமா அல்லது தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா, எதற்காக அழுகிறது குழந்தை? குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன, அவர்களை அமைதிபடுத்துவது எப்படி என்பதைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையை மேலும் மேலும் நன்கு புரிந்துகொள்ளும் போது அதன் அழுகையின் தன்மையை வைத்து குழந்தைக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


எனக்கு உணவு தேவை

குழந்தை அழுவதற்கான பொதுவான காரணம் பசி தான். குழந்தையின் வயிறு சிறியதாகையால் அதனால் அதிகம் சாப்பிட முடியாது. குழந்தை பசியோடு இருக்கக் கூடும் ஆகவே அழுதால் அதற்கு பால் புகட்டுங்கள்.

நான் சொகுசாக இருக்க வேண்டும்

சில குழந்தைகள் தங்களது நாப்கின்கள் மாற்றப்படுவதைப் பற்றி அதிகம் கவலைப்படாது. சில குழந்தைகள் தங்கள் தோல் லேசாக நமைச்சல் எடுத்தாலே அழத் தொடங்கிவிடும். சில சமயங்களில் நாப்கின்கள் இறுக்கமாக பற்றியிருக்கிறதா அல்லது குழந்தையின் உடைகள் ஏதாவது அசௌகரியத்தை தந்திருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

எனக்கு இதமாக இருக்க வேண்டும் (அதிக சூடோ, அதிக குளிரோ கூடாது)
உங்கள் குழந்தை தனது மெத்தையில் படுத்திருக்கும் போது மிகவும் சூடாகவோ அல்லது சில்லென்றோ இருக்கிறதா என்பதை அதன் வயிற்றை தொட்டு சோதித்துப் பாருங்கள் (காலையோ கையையோ தொட்டுப் பார்க்க வேண்டாம். அது எப்போதும் சற்று சில்லென்றே இருக்கும்). குழந்தை சூடாக இருந்தால் போர்வையை விலக்கி விடுங்கள். சில்லென்றிருந்தால் போர்வையை போர்த்துங்கள். குழந்தை இருக்கும் அறையின் வெப்பநிலையை 64 டிகிரி பாரனீட் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னை தூக்கிவைத்துக் கொள்ளுங்கள்

சில சமயங்களில் உங்கள் குழந்தை தன்னை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடும். குழந்தையை முதல் சில மாதங்களுக்கு அதிகமாக தூக்கிவைத்திருப்பதால் குழந்தையை ''பாழாக்கி'' விடுவோம் என்று கவலைப்பட வேண்டாம். குழந்தையை மடியில் கட்டிக் கொண்டு ஆனால் கைகளை சுதந்திரமாக வைத்த படி உங்கள் வேலைகளை கவனிக்க ஏற்படியான தோள்பட்டை ஆடைகள் இருக்கின்றன.

எனக்கு ஓய்வு தேவை
பச்சிளங் குழந்தைகளால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது. ஆகவே, ''இனி என்னால் தாங்க முடியாது'' என்று கூறுவதாகவும் அதன் அழுகை இருக்கலாம். அமைதியான இடத்திற்கு குழந்தையை எடுத்துச் செல்லுங்கள், சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தை தூங்க ஆரம்பிக்கும்.

எனக்கு உடல் நலம் சரியில்லை

உடல் நலமில்லாத குழந்தை வழக்கத்திற்கு மாறான தொனியில் அதிக சத்தத்துடனோ அல்லது ஒரு வித அவசரத் தொனியுடனோ அழும். அப்படி அழும் போது டாக்டரிடமோ அல்லது தாதியிடமோ குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். குழந்தை அழும் போது மூச்சுத் திணறல் இருந்தாலோ, வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் இருந்தாலோ உடனே டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

எனக்கு ஏதோ தேவை...ஆனால் சொல்லத் தெரியவில்லை
பல பச்சிளங் குழந்தைகள் வயிற்று வலியின் காரணமாக தொடர்ந்து அழக்கூடும். இதை சமாளிப்பது கடினம். உடனே தீர்க்க எந்த மாயாஜாலமும் இல்லை. சில அபூர்வமான சமயங்களில் இந்த வயிற்று வலி மூன்று மாதங்களுக்குக் கூட நீடிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது நல்லது

அழும் உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த வழி

0


உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள். முயற்சி செய்து பாருங்கள்.

குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள்
பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன. ஆகவே குழந்தையை போர்வையால் போர்த்தினாலோ அல்லது தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாலோ பாதுகாப்பாக உணர்கிறதா என்று பாருங்கள்.

பின்னணி சப்தங்கள்

கருவறையில் இருக்கும் போது தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும். மென்மையான இசையை ஒலிக்கச் செய்வது அல்லது தாலாட்டு பாடுவது& பின்னணியில் வாஷிங் மெஷின் சத்தம் வந்தாலும் பரவாயில்லை& ஆகியவை குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கச் செய்யும்.

மென்மையாக ஆட்டுவது
நீங்கள் நடக்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ மென்மையாக குழந்தையை ஆட்டுங்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான தொட்டில் சில குழந்தைகளை அமைதிபடுத்தும். காரில் செல்லும் போது சில குழந்தைகள் கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடனே தூங்கி விடும்.

மசாஜ் செய்து விடுங்கள்
மசாஜ் குழந்தைகளை அமைதிபடுத்தும். வயிற்று வலி இருக்கும் போது வயிற்றை தடவி விடுவது நல்லது. குழந்தையின் வலியை கஷ்டத்தைப் போக்க நீங்கள் ஏதோ முயற்சி செய்கிறீர்கள் என்ற ஆறுதலை அது உங்களுக்குத் தரும்.

குழந்தை விரல் சூப்புவது தவறில்லை
சில பச்சிளங் குழந்தைகள் விரல் சூப்புவார்கள். இது அவர்களுக்கு சொகுசான ஓர் உணர்வைத் தரும். ஆனால் விரல் சுத்தமாக இருக்க வேண்டும். ''சொகுசாக சூப்புவது'' என்பது குழந்தையின் இதயத் துடிப்பை சீராக்கும், வயிற்றுக்கும் நல்லது, குழந்தையும் அமைதியாக இருக்கும்.

உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம்

தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான்:

•நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்

•உங்களுக்கு கேட்காதவாறு குழந்தை அழும்படி சிறிது நேரத்திற்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் குழந்தையை விடுங்கள்.

•நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து சிறிது நேரத்திற்கு குழந்தையை அவரிடம் தாருங்கள்.

•அக்கம்பக்கத்தில் உங்களைப் போன்று புதிதாய் குழந்தை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

•உங்கள் குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?

0
Dr . ஜெயசிறீ கனகராஜ்


குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்!

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.

பாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்கிற ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.

இதை எப்படிச் செய்வது?

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு

0
Dr . Jeyasiri Gayaraj

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்.

நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப்பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது... அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அவர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.
உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்துவிடும். அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு.
இப்படி அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன..?
தாயின் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.

இப்படி ஆகும் போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.
பிரசவமான பெண்களுக்கு மிகவும் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என்கிற நிலை ஏற்படுவதுண்டு. (இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)

இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.
சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக்கிறோம். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.
சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக் கொன்றுவிடும் அளவுக்கேகூடச் செல்வார்கள்!
தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற்படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை.. இது சாதாரண விஷயம்தான்.

கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அந்தச் சமயத்தில்தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டுவர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.

கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரிதாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந்துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாகத் தொங்கினாற்போல காட்சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டால் தாயின் மார்பகம் நிரந்தரமாகவே தொங்கிப் போய்விடும் வாய்ப்புள்ளது.

கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவது நல்லது. அதுவும் தனக்கு சரியான அளவிலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொருமுறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். இவர்கள் சாதாரண பிரா அணியாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக்கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணியலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே...’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?
குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

Saturday, April 24, 2010

சோயா உருண்டை குழம்பு

0

தேவையான பொருட்கள்

  • சோயா உருண்டைகள் – 1 1 /2 கப்
  • கெட்டித் தயிர் – 2 கப்
  • சோம்பு – 1 /2 தேக்கரண்டி
  • நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தழை – 1 1 /2 மேசைக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 1 /2 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 1 /2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 3 /4 தேக்கரண்டி
  • உப்பு - 1 1 /2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

அரைக்க

  • சின்ன வெங்காயம் – 1 /2 கப்
  • பூண்டு – 8 பல்

வறுத்து அரைக்க

  • முந்திரிபருப்பு - 15
  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. தண்ணீர் கொதித்ததும் சோயா உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  3. தண்ணீரை வடித்துவிட்டு, உருண்டைகளைப் பிழிந்து வைக்கவும்.
  4. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. எண்ணெய் ஊற்றாமல் முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் லேசாக வறுத்து, முன்பு வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  7. பின் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
  8. குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  9. தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  10. குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  11. கடைசியாக சோயா உருண்டைகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை
  12. கொதிக்க விடவும்.

குறிப்பு
சோயா உருண்டை குழம்பு சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List