Sunday, February 15, 2009

தையல் டிப்ஸ்கள்

0
1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.

4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.

9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.

10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.

பிளவுஸ் தைக்கும் போது

1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.

2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.

துணிகளை வெட்டும் போது

துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.

யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?

1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.

2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.


3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.

சுடிதார் தைக்கும் முறை

0


1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.


முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து
தைக்கவும் (படம் 5)

Bottom

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.

Friday, February 6, 2009

குறுக்குத் தையல் (Cross Stitch) கற்றுக்கொள்ள வாருங்கள்

0

தேவையானப் பொருட்கள்

  • அய்டா ஃபேப்ரிக்(aida fabric) - 3" X 3" அளவானது
  • சிறிய ஃபிரேம் - 1
  • ஊசி
  • எம்பிராய்டரி நூல்கள் - டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை
இதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.
step 1
இதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்.
step 2
இதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.
step 3
இதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.
step 4
இதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.
step 5
தையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.
step 6
தைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.
step 7
முதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.
step 8
முதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.
step 9
தைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.
step 10
பூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கும். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்.
step 11
குறுக்குத் தையலின் வகைகளையும், எப்படி செய்வது என்பதையும் திருமதி. நர்மதா அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். அறுசுவை நேயர்களுக்கு மிகவும் அறிமுகமான திருமதி. நர்மதா அவர்கள் சமையல் மட்டுமன்றி, கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகுந்த திறன் வாய்ந்தவர்.
step 12

எனக்கு தெரிந்த சில தையல்

0
தையல் கலையினை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது இருந்தாலும் எனக்கு தெரிந்த சில தையல் (எம்ப்ராய்டரி) சொல்லி தருகிறேன்.

எம்ப்ராய்டரி செய்யும் பொழுது கவணிக்க வேண்டியவை:

1. எந்த ஒரு கலை செய்வதாக இருந்தாலும் செய்பவர்கள் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் கலை ஆர்வத்தோடு செய்வது மிகவும் முக்கியமாகும்.
2. துணிகளில் எம்ப்ராய்டரி செய்யும் பொழுது நல்ல வெளிச்சமான இடத்தில் இருந்து செய்ய வேண்டும்..
3. தொடர்ந்து ஒர்க் பண்ணாமல் உடலுக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுத்து இடைவெளி விட்டு செய்யவும்.
4. நாம் செய்கின்ற ஓர்க் மிகவும் துல்லியமாகவும், எந்த ஒரு தவறும் வராமலும், கவனத்தோடும் செய்யனும்..
5. நாம் ஓர்க் பண்ணுகின்ற துணி, நூல், கண்ணாடி, குந்தன், பாசி, முத்து எல்லாமே மிகவும் தரமானதாக வாங்கி பயன்படுத்தவும்.
6. எந்த ஓரு தையல் வேலை செய்வதாக இருந்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்து சுறுசுறுப்பாகச் செய்யவும். இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து செய்வது உடல் நலத்துக்கு நல்லதல்ல


கையினால் செய்யக்கூடிய எம்ப்ராய்டரியில் சில வகைகள்


சங்கிலித்தையல்
காம்புத் தையல்
லூப்
லேஸி, டேசி
சிறு முடிச்சுத் தையல்
அடைப்பு தையல்
பட்டன் தையல்
ஓட்டு தையல்
இன்னும் 40 வகை தையல் இருக்கு..
எல்லா தையலுக்கும் முதல் ஆரம்பம் சங்கிலி தையல் தான்
இந்த தையலை நாம் அழகான முறையில் கற்றுக்கொண்டால் எல்லா வகையான தையலும் போடலாம்.
சங்கிலித்தையல்
இந்த தையல் பார்பதற்கு சங்கிலி போல் ஒன்றுக்கொன்று பிணைப்புடன் காணப்படும்.
எம்ப்ராய்டரி செய்ய தேவையான பொருட்கள்:
ஊசி
எம்ப்ராய்டரி நூல்கள்
துணி,
பிரேம்
பென்சில்
கத்திரிக்கோல்
டிராயிங் பேப்பர்
கார்பன் பேப்பர்

முதலில் துணியில் பிரேம் போட்டு வைக்கவும். அதன் மீது முதலில் பழகுவதால் ஓர் நேர் கோடு பென்சில் வைத்து போடவும் அதன் மீது தையல் போட்டு பழகவும்.

எம்ப்ராய்டரி நீள ஊசியில் சங்கிலித்தையல் இப்ப போடுவோம்.
(இந்த ஊசி நீளமாகவும் அடியில் சிறு வளைந்து இருக்கும்)


நூலில் முதலில் ஒரு முடிச்சு போடவும்.
இந்த முடிச்சு பகுதியினை துணிக்கு கீழே வைத்து ஊசியினை மேலிருந்து துணிகுள்விட்டு நூலை மேலே இழுக்கவும்.

பிறகு இதை போல் தொடர்ந்து போடவும்
கடைசியில் நூலை மேலே இழுத்து மேல் உள்ள நூலை உள் பகுதியில் இருந்து இழுத்தால் முடிச்சு விழும்

சுடிதார் வகைகள்

0
தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் அ‌திக நேர‌ம் ஆகு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்ததே. ஆனா‌ல் து‌ணியை‌த் தை‌க்க‌க் கொடு‌க்கவு‌ம் நேர‌ம் ஆ‌கிறது இ‌ப்போதெ‌ல்லா‌ம்.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் அ‌‌த்தனை மாட‌ல்க‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. எ‌ந்த மாட‌லி‌ல் சுடிதாரையோ, ஜா‌க்கெ‌ட்டையோ தை‌ப்பது எ‌ன்று முடிவெடு‌‌ப்பது எ‌ன்பது பெ‌ண்களு‌க்கு பெரு‌ம் ‌பிர‌ச்‌‌சினையா‌கிறது.

சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.

webdunia photoWD
பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இ‌ல்லாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள்.

அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லா வற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.

அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. பு‌திதாக வரு‌ம் மாட‌ல்களை‌த்தா‌ன் இளசுகளு‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தா‌ங்க‌ள் தவறாக தை‌த்து ‌விடு‌ம் பே‌ன்டினை‌க் கூட மாட‌ல் எ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ‌விடு‌கி‌ன்றன‌ர் தைய‌ல்கார‌ர்க‌ள்.

தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சா‌பி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது.

அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.

webdunia photoWD
கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.

அப்படி இப்படி ஒரு சுடிதார் தைக்க எத்தனை ஆய்வுகள் நடத்த வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?

கவுன்

0
Sample Image


தேவையான பொருட்கள்
அளவு கவுன்: ( 4 -6 மாதம் )
துணி - 1 1/4 மீட்டர்
நூல் - தேவையான அளவு


Image

அதை 2ஆக படத்தில் உள்ளபடி மடித்து, கீழ் உள்ள பகுதியை படத்தில் காட்டியபடி அளவு எடுக்கவும்
Image

அதை நான்காக படத்தில் உள்ளபடி மடித்து, போடவும்
Image

மேல் உள்ள முன் பகுதியை படத்தில் காட்டியபடி அளவு எடுக்கவும், இப்போது பாடி ரெடி
Image


கையின் மேல் பகுதியை அளவு எடுக்கவும்

Image


கையின் கீழ் பகுதியை அளவு எடுக்கவும

Image


அதனை குறித்துக் கொள்ளவும்,2 புள்ளியை இனைக்குமாறு வளைவாக கோடு போடவும்

Image

படத்தில் காட்டியபடி கட் செய்த பாடியின் முதல் பகுதியை எடுக்கவும்

Image

அதனை 2 ஆக மடிக்கவும்,

Image

அதர்க்கு மேல் அளவு சட்டையை போட்டு பின் செய்யவும்

Image

பின் பகுதி கழுத்து, கை அளவுகளை குறிக்கவும்

Image

இப்போது பாடியின் பின் பகுதி ரெடி

Image

அதை போல் முன் பகுதியையும் குறிக்கவும்

பாடியின் முன் பகுதி ரெடி

Image


Thursday, February 5, 2009

வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தையற்கலை

0

தையல் கலைஞர் செல்வி வாகேஸ்வரி சன்னதிநாதன்

பெண்களின் கற்பனா சக்தியைத் தூண்டக் கூடிய அழகியல் கலைகளில் தையல் கலை முக்கிய இடம் பிடிக்கின்றது. தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்றால் அது மிகையாகாது. எந்தவொரு மனிதனுக்கும் உணவு உறைவிடத்தைப் போன்று உடையும் அத்தியாவசியமானதாகும். ஆகவே தையல் ஒரு முக்கியத்துவமான தொழிலாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆடைகளுமே யாரோ ஒருவரால் தைக்கப்பட்டதேயாகும்.

சிறுவர் ஆடைகள் என்று எடுத்துக் கொண்டால் Party Frock முக்கிய இடம் பெறுகின்றது. சிறுமிகளுக்கு ஏற்ற வகையிலும் வித்தியாசமான வடிவங்களிலும் Party Frock ஐப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இன்று எமது நாட்டில் தையல் வளர்ச்சி பெற்றுள்ளது. புதுப்புது டிசைன்களில் Party Frock ஐ எமது நாட்டு தையல் கலைஞர்கள் மிகவும் நுட்பத்துடன் தமது கலையார்வத்தை பயன்படுத்தி பல வடிவங்களில் மிகவும் நுட்பமாக தைத்து வெளியிடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த வகையில் Party Frock குறித்து அறிந்து கொள்வதற்காக தையல் கலைஞர் செல்வி வாகேஸ்வரி சன்னதிநாதனை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் எம்மை இன்முகத்தோடு வரவேற்று எமது கேள்விகளுக்கும் செய்முறையாக சலிப்பின்றி விளக்கமளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு,

தங்களுக்கு இந்த துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? அதற்காக தாங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? நான் சிறு வயதில் இருந்தே இந்த தையல் கலையில் ஆர்வத்துடன் இருந்து வந்தேன். அத்துடன் எனது சகோதரியும் இக்கலையில் ஈடுபட்டு வந்தமை எனக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனது சகோதரியிடம் சில விடயங்களில் பயிற்சி பெற்ற நான் பின்னர் 1998 ஆம் ஆண்டு சிங்கர் நிலையத்தில் எம்ரொய்டரி மற்றும் தையல் வேலைப்பாட்டையும் ஏனைய தையல் வேலைப்பாடான Party Frock திருமதி சாந்தி என்பவரிடமும் பயின்றேன். பின்னர் மேலதிக மணப் பெண் அலங்காரம், மகிந்தி ஆகியவற்றிற்கான பயிற்சிகளை திருமதி மஞ்சுளா பரசுராமனிடமும் கற்றேன். எனது இந்த முயற்சிகளுக்கு எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்தமையே எனக்கு பெரும் அனுகூலமாக அமைந்தது. நான் இந்தத் தையல் கலையை முதலில் பொழுது போக்கிற்காகவே கற்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கற்கும் போது தான் அதன் முக்கியத்துவம் விளங்கியது. இதனால் இதனை மேலும் திறம்பட பயிற்சி பெற்று எனது தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்ற ஓர் உத்வேகம் ஏற்பட்டது. அதனால் இதனைத் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றேன்.

இந்த தையல் கலையை எனது தொழிலாக கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றேன். ஆரம்பத்தில் நான் எனது குருவாகிய திருமதி சாந்தி என்பவருடன் இணைந்து Party Frock ஐ தைத்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொண்டோம். தற்பொழுது நான் தனியாக எனது வீட்டில் இருந்தபடியே Party Frock உள்ளிட்ட சுடிதார், சாறி பிளவுஸ், நைட்டி என்பவற்றை ஓடர்களுக்காக தைத்துக் கொடுக்கின்றேன். மேலும் தையல் தவிர்ந்த கேக் ஐசிங், றிச் கேக், பெயின்ரிங், சமையல் கலை என்பனவற்றையும் மேற்கொண்டு வருகின்றேன். இவற்றினால் எனக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் எனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபடியே தொழிலைச் செய்யக் கூடியதாகவும் உள்ளது.

தையல் கலை குறித்து தங்களின் கருத்து என்ன? இதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

தையல் கலை என்பது மிகவும் இலகுவானதும் அதிக பயன் உள்ளதும் ஆகும். தையல் கலையைப் பழகிக் கொள்வதன் மூலம் நாம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாக மேற்கொள்பவர்கள் மட்டும்தான் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தையலைப் பழகிக் கொண்டால் தமது தேவைக்கு சாறி பிளவுஸ், சுடிதார், பாவாடை, சட்டை, நைட்டி என தமக்கு தேவையான அனைத்துவிதமான உடைகளையும் தைத்துக் கொள்வதுடன் தமக்கு விரும்பிய டிசைனிலும் விதம் விதமாக தைத்துக் கொள்ள முடியும். அதனால் பெரும் தொகைப் பணம் மிச்சப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று சிறுவர், சிறுமியர் இருப்பின் அவர்கட்கு தேவையான அனைத்து விதமான Party Frock உட்பட பலதரப்பட்ட ஆடைகளைத் தைத்து விரும்பியபடி அணிவித்துக் கொள்ள முடியும். மேலும் இத் தையல் கலையைப் பயன்படுத்தி வீட்டையும் அலங்கரிக்க முடியும். பெண்கள் இக்கலையை வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம். செலவு குறைவானது. ஆனால் வருமானம் அதிகம் பெறக்கூடியது.

கற்பனைத் திறனுக்கு ஏற்ப திறமைகளை அதிகரித்து நுணுக்கமாகவும் அழகாகவும் தைப்பதன் மூலம் பலதரப்பட்ட நன்மைகளை அடையலாம். என்னைப் பொறுத்தமட்டில் தையல் எல்லோருக்குமே முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகும். இதனைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் எமது சிறு தேவைகளுக்கெல்லாம் பிறரை நாடாமல் நாமே அதனை நிவர்த்தி செய்ய முடியும். மேலும் நாங்களே எமது உடைகளை தைப்பதால் நவீன வடிவில் விரும்பியவாறு விரும்பும் போது தைத்துக் கொள்ளலாம். இந்த தையல் கலை ஊடாக நான் பலதரப்பட்ட நன்மைகளைப் பெறுகின்றேன். அத்துடன் வீட்டில் இருந்தபடியே அதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

Party Frock தைக்கும் முறை குறித்து கூறுங்கள்?

இந்த Party Frock இற்கு லேஸ்துணி, ஒகண்டி, சீக்குயின்ஸ் சேர்க்கப்பட்ட துணி, சாமோஸ் துணி,

நெற்துணி எனப் பலதரப்பட்ட துணி வகைகளை பயன்படுத்த முடியும். இதனை அலங்கரிப்பதற்கு கலர் கற்கள், முத்து, பீட்ஸ், லேஸ், சீக்குயின்ஸ், சிறிய பூக்கள், இலைகள், றிபன்கள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் உண்டு.

எனவே இவற்றில் முதலில் எமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டு பற்றனிற்கேற்ப துணிகளை எடுத்துக் கொண்டு வெட்டிக் கொள்வோம். இங்கு தரப்பட்டுள்ள அளவுகள் ஒரு வயதுடைய பிள்ளைக்குரியதாகும். மேல் உடம்பு அளவுகள் (அளவுகள் அங்குலத்தில் உள்ளது)

தோள்: 8 : 2 = 4''

மார்பு 20 : 4 = 5 + 1 (தையல் இடைவெளி) = 6''

தோளிலிருந்து இடுப்புவரை 8'' ஜோக் எனில் 5' முழு நீளம் 16"

இந்த அளவைப் பயன்படுத்தி உங்களுக்கு விரும்பிய வடிவில் மேல் உடம்பை வரைந்து கொள்ளவும். கீழ் உடம்பு

முழு நீளம் 16 : 8 = 11 + 1 (தையல் இடைவெளி) = 12'' மூன்று வகையான துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்ளின் நீளம் 10'' அகலம் 45'' சட்டின் நீளம் 11'' அகலம் 65'', நெற் துணி நீளம் 12'' அகலம் 65'' இவ் அளவுகளில் கீழ் உடம்பை வெட்டிக்கொள்ள வேண்டும். சட்டையின் விளிம்பைத் தைக்கும் போது விளிம்புகளை உருட்டி தங்கூசியையும் வைத்து உருட்டி தைக்க வேண்டும். அப்போது தான் அது விரிந்து அழகாக இருக்கும்.

மேல் துண்டுகளை கை, கழுத்து எனத் தைத்த பின்னர் கீழ் பகுதிக்காக வெட்டப்பட்ட மூன்று துணியையும் தனித்தனியாக சுருக்கி ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிய பின் மேல் உடம்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இனி எமக்கு தேவையான இடங்களில் சீக்குயின்ஸ் நெற், கல், பூ என்பவற்றை விரும்பிய இடத்தில் வைத்து தைத்து மேலும் மெருகூட்டிக் கொள்ள முடியும்.

இந்த Party Frock ஐ தைக்க தற்பொழுது அதிக பணம் செலவிடப்படுகின்றது. துணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அதிக விலை ஏற்பட்டுள்ளதால் அனேகர் கடையில் ரெடிமேட்டாகவே புதிய சட்டைகளை வாங்கிக் கொள்கின்றனர். இருப்பினும் திருமண வைபவங்களுக்கு Flower Girls இற்கு ஒரே மாதிரி வித்தியாசமான வடிவில் சட்டைகளைப் பெற விரும்புபவர்கள் எங்களை நாடுகின்றனர்.

இந்த Party Frock ஐ தைக்க எனக்கு ஒரு நாள் தேவைப்படுகின்றது. இருப்பினும் அதிகம் Orders இதற்கு வராததால் செய்யக்கூடியதாக உள்ளது. ஏனெனில் சாறி பிளவுஸ், சல்வார் போன்றவற்றை விரைவில் தைத்து விடுவேன். இதனாலும் இந்த Party Frock இற்கு அதிக பணம் அறவிடப்படுகின்றது. என்னதான் இருப்பினும் எமது தேவைக்கேற்ப அதனை விரும்பிய டிசைனில் அளவாக பெற்றுக் கொள்ளக்கூடியதால் இதனைத் தைத்துப் பெற்றுக்கொள்ள பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List