Showing posts with label kichan. Show all posts
Showing posts with label kichan. Show all posts

Saturday, April 24, 2010

சோயா உருண்டை குழம்பு

0

தேவையான பொருட்கள்

  • சோயா உருண்டைகள் – 1 1 /2 கப்
  • கெட்டித் தயிர் – 2 கப்
  • சோம்பு – 1 /2 தேக்கரண்டி
  • நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தழை – 1 1 /2 மேசைக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 1 /2 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 1 /2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 3 /4 தேக்கரண்டி
  • உப்பு - 1 1 /2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

அரைக்க

  • சின்ன வெங்காயம் – 1 /2 கப்
  • பூண்டு – 8 பல்

வறுத்து அரைக்க

  • முந்திரிபருப்பு - 15
  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. தண்ணீர் கொதித்ததும் சோயா உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  3. தண்ணீரை வடித்துவிட்டு, உருண்டைகளைப் பிழிந்து வைக்கவும்.
  4. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. எண்ணெய் ஊற்றாமல் முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் லேசாக வறுத்து, முன்பு வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  7. பின் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
  8. குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  9. தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  10. குழம்பிலிருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  11. கடைசியாக சோயா உருண்டைகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை
  12. கொதிக்க விடவும்.

குறிப்பு
சோயா உருண்டை குழம்பு சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

பருப்பு உருண்டை குழம்பு(வடைகறி)

0



தேவையான பொருட்கள்



உருண்டைக்கு

  • கடலைபருப்பு – அரை கப்
  • துவரம்பருப்பு - 1 மேசைகரண்டி
  • காய்ந்தமிளகாய் – 3
  • சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 / 4 கப்
  • பொடியாக நறுக்கிய பூண்டு – 1 மேசைகரண்டி
  • பொடியாக நறுக்கிய மல்லிதழை – 1 மேசைகரண்டி
  • தேங்காய் துருவல் - 1 மேசைகரண்டி
  • உப்பு – தேவையான அளவு

குழம்புக்கு

  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி - 3
  • மிளகாய்த்தூள் - 2 1 / 2 தேக்கரண்டி
  • தனியாதூள் – 1 1 / 2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
  • புளி – எலுமிச்சை அளவு
  • பூண்டு - 10 பல்
  • கருவேப்பில்லை, மல்லிதழை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

  • சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

  1. உருண்டைக்கான பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு வரமிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
  3. உருண்டைக்கென கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து ஒன்றாக உருட்டிக் கொள்ளவும்.
  4. இவற்றை ஆவியில் அரைவேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  5. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  6. புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
  7. எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  8. இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, புளி தண்ணீரையும் ஊற்றவும்.
  9. அதில் மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  10. குழம்பு நன்கு கொதிக்கும்போது, செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.
  11. 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், கருவேப்பிலை, மல்லிதழை தூவி இறக்கவும்.

குறிப்பு

  1. நீர்க்க இருக்கும் இந்த குழம்பு குழைவான சாதத்துக்கு நன்றாக இருக்கும்.
  2. இதையே கெட்டியாக வைக்க விரும்புவர்கள் தேங்காய் துருவலுடன், 5 முந்திரிபருப்புகளை வைத்து அரைத்து கடைசியில் சேர்த்து இறக்கினால் கெட்டியான குழம்பு கிடைக்கும்.

Monday, September 7, 2009

உருளைக்கிழங்கு சாதம்

0
குழ‌ந்தைகளு‌க்கு உருளை‌க் ‌கிழ‌ங்கு சாத‌‌ம் செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

தேவையானவை

உருளைக்கிழங்கு - 100 கிராம்
அரிசி - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
எ‌ண்ணெ‌ய் - 1 தே‌க்கர‌ண்டி
சோ‌ம்பு, ப‌ட்டை - ‌சி‌றிதளவு
ச‌ெ‌ய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு தேவையான அளவு ‌நீ‌ர் ‌வி‌ட்டு, உ‌ப்பு சே‌ர்‌த்து வேக வை‌க்க வே‌ண்டு‌ம்.
சாத‌ம் வெ‌ந்து வரு‌‌ம்போது, வெந்த உருளைக்கிழங்கை பிசைந்து சாத‌த்‌தி‌ல் போ‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் வேக ‌வி‌ட்டு எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சோ‌ம்பு, ப‌ட்டை போ‌ட்டு தா‌ளி‌த்து அ‌தி‌ல் இ‌ந்த சாத‌த்தை‌ப் போ‌ட்டு வத‌க்‌கி சா‌ப்‌பிடவு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த ம‌சி‌த்த உணவு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம்

கருணை‌க்‌கிழ‌ங்கு வறுவ‌ல்

0
தேவையானவை

கருணை‌க் ‌கிழ‌ங்கு - 1/4 ‌கிலோ
‌
மிளகா‌ய் தூ‌ள் - 4 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி
‌
மிளகு தூ‌ள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
பூ‌ண்டு - 4 ப‌ல்
எ‌ண்ண‌ெ‌ய் - தேவையான அளவு
பு‌ளி - ‌சி‌றிது

செ‌ய்யு‌ம் முறை

கருணை‌க் ‌கிழ‌ங்கை தோ‌ல் ‌நீ‌க்‌கி ப‌ட்டை ப‌ட்டையாக வெ‌‌ட்டி வேக வை‌க்கவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் பு‌ளி‌த் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி, அ‌தி‌ல் தேவையான அளவு உ‌ப்பு, ‌மிளகா‌ய், ம‌ஞ்ச‌ள், ‌மிளகு தூ‌ள், பூ‌ண்டை த‌‌ட்டி‌ப் போ‌ட்டு கெ‌ட்டியாக கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

கருணை‌க் ‌கிழ‌ங்கு ‌மிதமாக வெ‌ந்தது‌ம் த‌ண்‌‌ணீ‌ரி‌ல் இரு‌ந்து வடி‌த்து இ‌ந்த கரைச‌லி‌ல் போடவு‌ம்.

‌
சி‌றிது நேர‌ம் ஊ‌றியது‌ம், அடு‌ப்‌பி‌ல் தோசை‌க் க‌ல்லை வை‌த்து ந‌ன்கு கா‌ய்‌ந்தது‌ம் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி இ‌ந்த கருணை‌க் ‌கிழ‌ங்கு மசாலாவை‌ப் போடவு‌ம். ‌மீ‌ன் வறு‌ப்பது போல த‌னி‌த்த‌னியாக து‌ண்டுக‌ள் க‌ல்‌லி‌ல் வேகு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌
அ‌வ்வ‌ப்போது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌திரு‌ப்‌பி‌ப் போடவு‌ம்.

10 ‌
நி‌மிட‌த்‌தி‌ல் சுவையான கருணை‌க்‌கிழ‌ங்கு வறுவ‌ல் தயா‌ர்

கறிவேப்பிலை சாதம்

0
தேவையான பொருட்கள்

அ‌ரி‌சி - ஆழா‌க்கு
க‌றிவே‌ப்‌பிலை - 1 க‌ப்
கடலைப்பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 1 தே‌க்கர‌ண்டி
தா‌ளி‌க்க
கடுகு, நெ‌ய், உ‌ப்பு - ‌சி‌றிதளவு

செய்முறை
அ‌ரி‌சியை வேக வை‌த்து உ‌‌தி‌ரியாக வடி‌த்து‌ ஆறவை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் நெ‌‌ய் ஊ‌ற்‌றி ந‌ன்கு கழு‌‌விய க‌றிவே‌ப்‌பிலையை நெ‌ய்‌யி‌ல் வறு‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
வாண‌லி‌யி‌ல் நெ‌ய் ஊ‌ற்‌றி, கடுகு போ‌ட்டு தா‌ளி‌த்து உளு‌த்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வ‌று‌க்கவு‌ம்.

த‌ற்போது, ஆறவை‌த்த சாத‌த்‌தி‌ல் பொடி‌த்த க‌றிவே‌ப்‌பிலை பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த பரு‌ப்பு வகையறா‌க்களை ஒ‌ன்றாக‌க் கொ‌ட்டி தேவையான அளவு உ‌ப்பு போ‌ட்டு கல‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

சுவையான க‌றிவே‌ப்‌பிலை சாத‌ம் தயா‌ர். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌மிகவு‌ம் ந‌ல்ல‌து.

பாசிப்பருப்பு கார வறுவல்

0
பாசிப்பருப்பு கார வறுவலை பலரும் கடைகளில் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.
இனி வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

தேவையானவை

பாசிப்பருப்பு - ஒரு கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்யும் முறை

முதலில் பாசிப் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் பாசிப் பருப்பில் இருந்து, தண்ணீரை வடித்து விடவும். அதனை உலர்ந்த துணியில் போட்டு நிழலில் உலர்த்தவும்.

பாசிப் பருப்பு நன்கு உலர்ந்ததும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதிலேயே உப்பு, மிளகாய் தூள் போட்டு காய விடவும்.

பின்னர் பாசிப் பருப்பை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், வெறும் எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொண்டு தனியாக பருப்பிலும் உப்பு, காரம் சேர்த்து கலக்கிக் கொள்ளலாம்
 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List